பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 எஸ். எம். கமால் "இப்படியே இருந்தால் எப்படி ஒவ்வொருவரும் பெரியவார் சொன்னதின் பேரில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி சொன்னால்தானே மேற்கொண்டு நடவடிக்கை பற்றி முடிவு செய்யலாம். இது தனிப்பட்டோர் பிரச்சினையல்ல. நமது மறவா சமுகத்தின் தன்மானம் பற்றியது. நமது நாட்டின் தலைவிதி பற்றியது. நாட்டுத் தலைவர்களாகிய நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆதலால் தங்களது அபிப்ராயங்களை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லுங்கள். " வீரசிம்மனது வேண்டுகோள் இது. உடனே பருத்திக்குடி நாட்டு நாடாள்வர் ஏதோ சொல்ல எத்தனித்தார். "சொல்லுங்கள் அப்படியே அமர்ந்தவாறு சொல்லலாம்" பெரியவர் உற்சாகப்படுத்தினார். "நான் இதுவரை கேள்விப்பட்டதும் சற்று நேரத்திற்கு முன்னர் பெரியவர் சொன்னதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. சேதுபதி மன்னர் வலுவிழந்துவிட்டாரா? அல்லது வழி தவறிவிட்டாரா? என்பது ஆராயப்பட வேண்டியது. எனது கருத்தில் வழி காட்டியாக அமைய வேண்டியவர் வழி தவறிவிட்டார் என்றே கருதுகிேறன்" என பருத்திக்குடி நாட்டு நாடாள்வார் சொன்னதும் ஏனைய நாடாள்வார்களும், "இனிமேல் நமக்கு இந்த மன்னர் தேவையில்லை. அரசியல் ஆவணங்களில் கூட தெலுங்கு மொழியைப் பயன்படுத்தும் இந்த மன்னர் மதுரை நாயக்கரது தனி பாளையக்காரராக இருக்கட்டும். மறவர் சீமைக்கு புதிய மன்னர் ஒருவரைத் தேர்வு செய்வோம்" என்று ஒரே குரலில் தங்களது வெறுப்பைத் தெரிவித்தனர். பெரியவர் தமது முயற்சியில் முதல் வெற்றி பெற்றதாக நினைத்து மனத்திற்குள் மகிழ்ந்தார். அவரது தோற்றத்தில் புதிய தெம்பு காணப்பட்டது. அவர் இப்பொழுது மீண்டும் பேசினார். "தங்களது முடிவு எனக்கு மன நிறைவைத் தருகிறது. அதே முடிவுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக நானும் இந்த