பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 205 இளைஞர்கள் வீரபாண்டியனும் வீரசிம்மஸ்னனு:ம் செயல்பட்டு வருகிறோம். அதன் விளக்கத்தையும் இப்பொழுது கூறுகிறேன். மறவர் சீமையின் வடக்கு, கிழக்குப் பகுதியில் இந்த அரசிற்கு எதிரான பிரச்சாரம் செய்து வருவதுடன் நமக்கு ஆதரவாகப் பல இளைஞர்களை நமது அணியில் இணைத்து வருகிறோம். இத்துடன் நமது திட்டத்திற்குத் தேவையான ஆயுதங்களைக் கூட டச்சு பரங்கிகளிடமிருந்து பெறுவதற்கும் பெரும் முயற்சி செய்து வருகிறோம். இது சம்பந்தமாக டச்சு பரங்கிகளை பத்து நாட்களுக்கு முன்னர் நமது தனுக்காத்த தேவர் யாழ்ப்பாணம் சென்று சந்தித்திப் பேசி வந்து இருக்கிறார். இந்த விஷயங்களை எல்லாம் பகலுணவிர்குப் பின்னர் பேசலாம் . . . ." என்று தமது பேச்சை முடித்துக் கொண்டு, "வீரபாண்டியா சாப்பாடு பரிமாற ஏற்பாடு செய்யுங்கள்" "அப்படியே ஐயா!" என்று பதில் சொன்ன வீரபாண்டியனுடன் வீர சிம்மனும் சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்றனர். நாடாள்வார்களும் எழுந்து கைகால் அலம்புவதற்காக ஆயத்தமானார்கள். § {} {}