பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 2O7 இளந்துறவி வீரசிம்மன் அந்த முன் மண்டபத்தில் அமர்ந்து திவ்யபிரபந்தப் பாகரங்கள் சிலவற்றை பாடியவாறு ஒரு நூணில் சாய்ந்து அமர்ந்து இருந்தார். வடநாட்டு பைராகி ஒருவர் அந்தக் குளத்தில் நீராடலை முடித்துவிட்டு தனது ஈரமான உடைகளை அந்தக் காலை இளவெயிலில் மண்டபம் அருகே நின்று காயவைத்துக்கொண்டிருந்தார். ஆலயவாசல் திறந்து இருந்தது. ஆனால் இன்னும் காலை பூஜை நடைபெறவில்லை. அங்கிருந்து மூன்று கல் தொலைவில் உள்ள அரியான்குண்டு என்ற குடியிருப்பில் இருந்து பூஜகர் வர வேண்டும். அவரை எதிர்பார்த்தவாறு ஆலய வாசலில் பண்டாரம் பூக்குடலையுடன் நின்றுகொண்டு இருந்தார். அப்பொழுது கிழக்கே இராமேசுவரத்தில் இருந்து வந்த ஒரு பல்லக்கு நேரே பாம்பன் சாலையில் செல்லாமல் திருக்கோயில் வாசலில் இறக்கி வைக்கப்பட்டது. அதிலிருந்து இரண்டு பெண்கள் பூஜைப் பொருள்களுடன் கோயிலுக்குள் சென்றனர். அதுலரை முகப்பு மண்டபத்தில் இருந்த இளந்துறவியும் எழுந்து கோயிலுக்குள் சென்றனர். சிறிது நேரத்தில் சுவாமி தரிசனத்திற்கான ஏற்பாடுகளில் அர்ச்சகர் முனைந்தார். பின்னர் சுலோகங்களைச் சொன்னார். தேவியுடனும், இளவலுடனும் சிறிய திருவடிவான அனுமனுடனும் முழுக்கு, பூச்சு ஆகியவைகளுக்குப் பின்னர், மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் காட்சியளித்தார். அதிலும் அந்த மூலவர் இடது புறம் சற்று திரும்பி அனுமனிடம் ஏதோ சொல்வது போலவும், அனுமான் மிகவும் பவ்யமாக தலைதாழ்த்தி வலதுகையை முட்டு வாய்க்கு கீழே பிடித்தவாறு ஆச்சாரியனின் உபதேசத்தைப் பெறுகின்ற சீடன் போல, அங்கே இராமபிரான் முன் பணிந்து நிற்கும் தோற்றம் மனத்தைக் கவர்வதாக இருந்தது. அர்ச்சகர்