பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255luξΒιοεύτεστ(π)ίο ππερ πλήξ5θιμία - Q நீராவி மாளிகை முகப்பில் உள்ள விசாலமான வரவேற்பு அறை. தாமரையில் அமர்ந்த திருமகளும், இருபுறங்களிலும் துதிக்கைகளைத் துரக்கிய இரண்டு யானை உருவங்களும், பொறிக்கப்பட்ட நிலைச் சட்டங்களை கடந்து அறைக்குள் சென்றால் இடது புறம் சாளரத்தை ஒட்டி அழகிய இருக்கை ஒன்றும் அதற்கு முன்னால் கருங்காலி பலகையிலான மேஜையும் அடுத்து எதிரும் புதிருமாக வேறு இரண்டு இருக்கைகளும் இடம்பெற்று இருந்தது காணப்பட்டது. கவரில் வரையப்பட்டு இருந்த செடி,கொடிகள், மலர்கள், ஆகியவைகளை மறைத்தவாறு மெல்லிய வண்ணச் சேலைகள் தொங்கிக் கொண்டு இருந்தன. அறையின் மூலையில் இருந்த கலசத்தில் இருந்து அகிலின் புகையும் மணமும் எழுந்து மென்மையாக அந்த அறை முழுவதும் பரவிக்கொண்டு இருந்தது. பிரதானி மட்டும் அங்கே மன்னரது வருகைக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில் சேதுபதி மன்னர் நடுவில் இடப்பெற்று இருந்த இருக்கையில் அமர்ந்தார். "மதுரை நாயக்கரது ஒலைக்கு என்ன பதில் அனுப்பலாம்" என்று வினவியவாறு ஒரு ஒலைச்சுருளை மன்னர் நாற்காலியில் வைத்தார். "மகாராஜா மதுரைக்கு அபாயம் என்பது பாண்டிய மண்டலம் முழுவதற்குமே ஏற்படும் அபாயமாகும். மதுரை மன்னரது இக்கட்டான நிலையில் மறவர் சீமை ஒத்துழைப்பும் உதவியும் அளிப்பது அவசியம் எனக் கருதுகிறேன். என்றாலும், இதே திருமலை நாயக்கர், சில ஆண்டுகளுக்கு முன்னர் நமது நாட்டின் மீது படையெடுத்து வந்து சமூகத்தின் மாமனார் தனவாய் சேதுபதி மன்னரைத் தோற்கடித்து அவரை மதுரையில் சிறைப்படுத்தியிருந்த கொடுமையும் சிந்தனையைக் குழப்புகிறது."