பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 எஸ். எம். கமால் தீபாராதனையை முடித்து தீபத்தட்டை கருவறைக்கு வெளியே, நின்று மூன்று பக்தர்களிடம் நீட்டினார். அடுத்து துளசியும், தீர்த்தமும் வழங்கி, மூவரது தலையிலும் சடாரி சார்த்தி, ஆசிர்வாதம் செய்தார். பின்னர் கருவறையைத் தாழிட்டுவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார். அப்பொழுது அந்தப் பெண்மனி ஏதோ தட்சனையை பட்டரிடம் கொடுத்துவிட்டு பெருமாள் சன்னதியை பிரதட்சணம் செய்யத் தொடங்கினாள். பின்னர் ஒரு புறமாக நின்ற இளந்துறவியிடம் வந்து, "நமஸ்காரம். கவாமிகள் நேற்றே இங்கு வந்தாகிவிட்டதா? "ஆமாம் தேவி! இன்று எனது ஜென்ம நட்சத்திரமானதால் நேற்று மாலையிலேயே இங்கு வந்துவிட்டேன்." இன்று முழுவதும் இங்கேதான் இருப்பீர்களா?" "ஆம், மாலை வரை. சில நண்பர்களை இங்கே எதிர் பார்க்கிறேன். அப்புறம் இரவு தங்களுக்கு இராமேசுவரம் சென்றுவிட உத்தேசம்" இளந்துறவியின் பதில், இருவரது உரையாடலைக் கேட்டுக் கொண்டு இருந்த கலாதேவியின் பணிப்பெண் கோவிலுக்கு வெளியே உள்ள பல்லக்கிற்குச் சென்றுவிட்டாள். "ஆனால் நான் வடக்கே இராமநாதபுரம் திரும்ப வேண்டும். அரண்மனையில் மகாராணியார் மிகவும் சுகவீனமாக இருக்கிறார். என்னை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்." என்று சொல்லிய கலாதேவியின் கண்களில் வருத்தமும் ஏக்கமும் நிறைந்து இருந்தது. இளந்துறவி மெளனமாக நின்றார்.