பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 209 "என்ன? நான் பேசிக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் மட்டும் மெளனமாக இருக்கிறீர்கள். உங்களைச் சந்திப்பதற்குத் தானே இங்கு வந்துள்ளேன்." தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாள் கலாதேவி. "தேவி! நீ சொல்வது உண்மைதான். தொடர்ந்து உனது எதிர்பார்ப்பிற்கு உரியவனாக இருப்பேனா என்பதை எண்ணிப் பார்த்தேன். அவ்வளவுதான்" "ஏன் இப்படி எண்ணுகிறீர்கள்?II "நான் இதுவரை பொய் சொல்லிப் பழக்கப்படவில்லை. அத்துடன் உன் போன்ற உயர்ந்த கலைச் செல்வியைச் சந்தித்து உரையாடி உறவாடும் வாய்ப்பும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் நான் உன்னிடம் ஏற்கனவே கூறிய வண்ணம் ஒரு முக்கியமான ராஜியப் பணியிலே பொழுது அனைத்தும் போக்கி வருகிறேன். இந்த நிலையில் உன்னுடன் எனது உறவை வளர்த்துக் கொள்வதா? அல்லது முறித்துக்கொள்வதா? இல்லை உடனனையும் எனது பணியில் உதவுவதற்கு பயன்படுத்திக்கொண்டு, நமது உறவிற்குப் பங்கம் இல்லாமல் செய்துகொள்வதா? ஒரு வேளை எனது பணி என்ன என்பதை தெரிந்தபிறகு அதில் ஈடுபட நீ தயங்கினால் அடுத்து நமது நிலை என்ன?. . . . இப்படியே பல கேள்விகளை எனக்குள்ளே இந்த ஒரு மாதமாகப் புதிர் போல அடுக்கிக் கொண்டே செல்கிறது எனது மனம் தெளிவு பெறுவேனா? II என்பதே சந்தேகமாக உள்ளது. அவ்வளவுதான்.... இளந்துறவியின் இந்தப் பேச்சு கலாதேவிக்கு மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது எனபதை அவளது நிர்மலமான முகத்தின் பளிச்சிட்ட துயர ரேகைகள் கட்டிக்காட்டின.