பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 எஸ். எம். கமால் "ஸ்வாமி தங்களது இதயவாசலின் அன்புநாளங்களை அழுத்தி பிணைத்துக் கொண்டிருக்கும் தடைகளை உணர்கிறேன். தாங்கள் வெளிப்படையாகத் தங்கள் பணி என்ன என்பதைச் சொன்னாலும் சரி, அதில் அமைந்துள்ள பயங்கரம் எத்தகையது என்று கோடிட்டுக்காட்டினாலும் சரி. தங்களைப் பற்றிய எனது முடிவு இனிமேல் மாறாது. காரணம் கடந்த எட்டு ஆண்டுகளாக மதுரை சமஸ்தான நர்த்தகியாக பணியில் சேர்ந்த பிறகு திருமலை நாயக்க மன்னருடனும் அவர் அறிமுகப்படுத்திய புரு}ை சிரேஷ்டர்களுடனும் பேசிப் பழகும் வாய்ப்புகள், அவர்களது பரிசில்கள், பாராட்டுகள் பல கிடைத்தன. ஆனால் எனது ஆன்மாவை ஊடுருவி உள்ளத்தின் அடித்தளத்தை அப்படியே அனாவி, என்னை அசக்தையாக்க கூடிய குரலை, பாட்டை, குரல் வளத்தில் நெளியும் அன்பு இழைகளை வேறு யாருடை பேச்சிலும் உணரவில்லை. ஆதலால் இந்த அபாரமான மாற்றம் -ல் அழகர் பெருமானது தெய்வீகத் திருவிளையாடல் என்றே கருதுகிறேன். ஆதலால், இந்த அதிசய சக்திமிக்க அமானுஷ்ய புருஷமு. கு, என்னை அர்ப்பணிக்க முடிவு செய்துவிட்டேன். அப்புறம் தங்களது முடிவு?... | ஏதோ ஒரு உணர்ச்சிப் பெருக்கில் வெளிப்படுவது போன்று கலா தேவியின் குரல் நின்றது. அவளது கண்கள் நானத்துடன் இளந்துறவியின் கண்களைக் கூர்ந்து பார்த்தன. அவளது பேச்சினால் ஈர்க்கப்பட்ட உள்ளத்துடன் இளந்துறவியின் பார்வை ஒருமுறை அவளைப் பார்த்துவிட்டு கருவறையின் சுவாமி சன்னதியில் எரிந்துகொண்டிருந்த துந்தா விளக்கின்மீது சென்றது. மாலை நேர காற்றின் வேகத்தில் அந்த விளக்கில் தத்தளித்தவாறு ஒளி வீசியது. "அப்புறம் . . . " கலாதேவி பேச்சைத் தொடர்ந்தாள். "இப்பொழுது புறப்பட்டால்தான் நாளை மதியமாவது இராமநாத புரம் போய்ச்சேரலாம்..."இளந்துறவியின் பதிலை எதிர்த்து.