பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 211 "நீ சொல்வது சரிதான். நீ இப்பொழுது புறப்படலாம்." இளந்துறவியின் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து இந்த சொற்கள் வரவில்லை. பதில் சொல்லவேண்டும் என்ற போக்கில்தான் அமைந்து இருந்தன. கலாதேவியும் புறப்படுவதற்கு தயாரானாள். அடுத்து எப்பொழுது சந்திக்கலாம் என்ற கேள்வி அவளது பார்வையில் ஒட்டிக்கொண்டிருந்தது. ஆனால் விடை கிடைக்கவில்லை. இருவரும் கோயில் முகப்பிற்கு வந்தனர். பிறகு என்ன? பல்லக்கு பாம்பன் நோக்கி நகர்ந்தது. இளந்துறவி போய் மண்டபத்தில் அமர்ந்தார். முற்பகல் கழிந்து நடுப்பகல் நெருங்கிக்கொண்டு இருந்தது. பாராயணத்திலும் பாடல்களிலுமாக பொழுதைக் கழித்த இளந்துறவி, மேற்கே இருந்த கோயிலை நோக்கி இருகை கூப்பி வணங்கிவிட்டு, அவரிடம் இருந்த சிறிய துணி முடிச்சை அவிழ்ந்து அதிலிருந்த அவல் திரட்டை எடுத்து உண்டார். பிறகு அந்த மண்டபத்தில் ஒரு பக்கத்தில் துண்டை விரித்துப் படுத்தார். நல்ல உறக்கம். விழித்து எழுந்தபொழுது சூரியன் அநேகமாக மேற்கில் அடிவானத்தை நோக்கி சரிந்துகொண்டிருந்தது. சாயங்கால பூஜைக்காக பட்டர் கோயிலுக்குள் சென்று கொண்டிருந்தார். அவரும் அங்கு சென்று பூஜையில் கலந்துகொண்டு கோயிலுக்கு வெளியே வந்தபொழுது இருவர் மண்டபத்தில் உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் வேறு யாருமல்ல. அவரது சகாக்களான வீரபாண்டியனும் தணுக்காத்த இராமுத் தேவரும்தான். "இவ்வளவு சிக்கிரமாக நீங்கள் இங்கு வருவீர்கள் என எதிர் பார்க்கவில்லை"இளந்துறவி சொன்னார்.