பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 எஸ். எம். கமால் "யாழ்ப்பாணத்தில் இருந்த தகவல் வந்துள்ளது. அவசரமாக இன்று இரவு அங்கு புறப்படவேண்டும். அதனால் சற்றுமுன்னதாகவே புறப்பட்டோம்" "நல்லது. இப்பொழுது நாம் வடகாட்டிற்குச் சென்று, யாழபபாணம் செல்ல படகு ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லவா?" "ஆமாம். இப்பொழுதே புறப்படுவோம். இராமநாதபுரத்தில் இருந்து செய்திகள் ஏதாவது உண்டா?" "விசேடமான செய்தி இல்லை. சேதுபதி மன்னர் தொண்டமான் சீமைக்குச் சென்று இருப்பதாக தகவல் எப்படியும் இன்னும் இரண்டு வாரங்கள் ஆகுாைம் அவர் திரும்பி வர." "அதற்குள்ளாக சேது நாட்டின் வடக்குப் பகுதிக்கு சென்று முக்கியமான நாட்டுத்தலைவர்களைச் சந்தித்து வர திட்டமிட்டு இருக்கிறேன். பெரியவர் தற்பொழுது எங்கு இருக்கிறார்?" "வழக்கம் போல சேதுக்கரை தோப்பில்தான்" "யாழ்ப்பாணக் கோட்டைக்கு டச்சுகளின் கவர்னர் வந்து இருக்கிறாராம். நமக்கு உதவி பெறுவது சம்பந்தமாக நேரடியாக பேசி முடிக்கலாம் என்று இருக்கிறோம். நாங்கள் எப்படியும் விரைவில் நல்ல செய்தியுடன் திரும்புவோம். நீங்கள் வரும் பவுர்ணமி அன்று ஆத்தங்கரைக்கு வந்து விடுங்கள். பெரியவரும் அப்பொழுது அங்கு இருப்பார். இந்த தகவலைத் தெரிவித்துப் போகத்தான் இங்கு வந்தோம்." "நல்லது. இப்பொழுதே நாம் வடகாட்டிற்குச் சென்று மீனவர்களை அணுகி படகிற்கு ஏற்பாடு செய்துவிட்டு கந்தமாதன