பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 215 கலாதேவி மகாராணியின் அறையில் நுழைந்தபொழுது கட்டிலில் படுத்து இருந்த ராணியார் எழுந்து அமர்ந்து "வா கலாதேவி" என்று வரவேற்புச் சொன்னார். அவரது ஆழிய அன்பான வரவேற்பில் திளைத்த கண்கள் கலங்கியவாறு, "மகாராணி" என்று சொல்லியவாறு கட்டில் அருகே சென்ற கலாதேவியை அப்படியே ராணியார் தழுவிக்கொண்டார். "மூன்று நாட்கள் நீ இல்லாது எனக்கு இரண்டு ஜன்மங்கள்போல இருந்தன. இராமேசுவரம் கோவில் வழிபாடு - = == II எல்லாம் எப்படி? "குறையொன்றும் இல்லை மகாராணி. இதோ பிரசாதம் கொண்டு வந்து இருக்கிறேன்." என்று சொல்லியவாறு ஒரு சிறிய பொட்டலத்தைப் பிரித்து அதிலிருந்து விபூதி குங்குமத்தை தனது கையாலேயே ராணியார் நெற்றியில் இட்டார். "ராணி இப்பொழுது உடல்நலம் எப்படி இருக்கிறது? மகாராஜா திருப்பத்துரர் சீமையில் இருந்து திரும்பிவிட்டார்களா?" கலாதேவி கேட்டாள். "எனது அன்புத் தங்கை வந்துவிட்டாள் அல்லவா? இனியேமல் எல்லாம் சரியாகிவிடும்." சற்று புன்னகையுடன் சொன்னார். கலாதேவியும் சேர்ந்து சிரித்தாள். "மகாராஜா வருவதற்கு இன்னும் ஒருவாரம் ஆகும். வரும் பொழுது உனக்காக கண்டதேவிக் காட்டிலிருந்து இருபுள்ளிமான் குட்டிகள் பிடித்து வர:சச்சொல்லி இருக்கிேறன்." மீண்டும் சிரித்துக்கொண்டே சொன்னார் ராணியார். - - = - II. - - "நான் என்ன சின்னஞ்சிறுமியா' கலாதேவி கேட்டாள்.