பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 எஸ். எம். கமால் "ஆம், கழுத்திலே தாழியும் கையிலே குழந்தையும் ஏற்படும் வரை எல்லாப் பெண்களும் சிறுமிகள்தான். மான் குட்டிகளை நமது குழந்தைகளைவிட மேலாகப் பேணிக் காக்க வேண்டும்....உனக்கு குழந்தை வளர்ப்பு பற்றிய பயிற்சியாகவும் இருக்கும்." காணப்பட்டது. மீண்டும் மகாராணியாரது பேச்சில் குறும்புத்தனம் "என்னைப் பற்றிப் பேசுவதென்றால் மகாராணியாருக்கு எப்பொழுதும் கிண்டலும் கேலியுமாகத்தான் இருக்கும்" சற்று சிணுங்கிக்கொண்டாள் கலாதேவி, "அப்பப்பா இப்பொழுதே இவ்வளவு கோபம் வருகிறது. மகா ராஜாவிற்குத் தெரிந்தால்...." "என்ன சொல்கிறீர்கள் ராணி." "ஒன்றுமில்லை. ஏதோ சம்பந்தமில்லாமல் சொல்லி. விட்டேன்" ராணியார் சமாளித்தார். "இல்லை. மகாராணியவர்கள் தனது தங்கை என்று என்னை சொல்லி அன்பு பாராட்டும் தங்கையிடம் எதனையோ மறைக்கிறீர்கள்...' "ம். வந்து ஒன்றுமில்லை. பிறகு ஒருநாள் சாவகாசமாகச் சொல்கிறேன். இப்பொழுது நாம் சாப்பிடச் செல்லலாமா? யார் அங்கே..." தானாவதி பெண் வந்து நின்று பணிந்தாள். "மகாராணி உத்தரவு" என்றாள். "சாப்பாடு தயாரா? நாங்கள் வருகிறோம்."