பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 217 "உத்தரவு" அறையை விட்டு தானாவதி சென்றதும் "கலா, == s = IT == == - சாப்பிடச் செல்லலாமா?' மகாராணியார் கேட்டார். தலையை மட்டும் அசைத்து இணக்கம் தெரிவித்தாள் கலாதேவி. கட்டிலில் இருந்து எழுந்து இருவரும் தங்களது உடைகளைச் சிர் செய்து கொண்டு விருந்து மண்டபம் சென்றனர். மகாராணியும் கலாதேவியும் மதிய உணவை முடித்துவிட்டு அந்தப்புரத்திற்கு வந்தபொழுது சில அஞ்சல் வீரர்கள் வாசலில் காத்திருப்பதாக தானாதிபதி, ராணியாரிடம் குனிந்து பணிவுடன் சொன்னார். இருவரும் அங்கே சென்ற பொழுது, 'சமுகத்திற்கு வணக்கம்" அஞ்சல் சேவகர் சொன்னார்கள். "மகாராஜா அவர்கள் எங்களை அனுப்பி வைத்தார்கள். தற்பொழுது காளையார் கோவில் கோட்டையில் இருக்கிறார்கள். இன்று திருப்பத்துரர் கோட்டை புறப்படுகிறார்கள். இராமநாதபுரம் திரும்ப இரண்டு வாரங்கள் ஆகும் என்று தகவல் சொல்லுமாறு பணித்ததுடன் . . . " என்று சொல்லிய அஞ்கல்காரர் இன்னொரு வீரரைப் பார்த்தார். ஒரு கோணிப்பையில் வைத்து இருந்த இரு புள்ளிமான்குட்டிகளை மகாராணியாரிடம் அந்தச் சேவகர் கொடுத்தார்.