பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IԱ) எஸ். எம். கமால் "ஆமாம். ஆனால் அதே நேரத்தில் பழமையை நினைத்துக் கொண்டிருந்தால் எதிர்காலம் வீணாகிவிடும். இன்னா செய்தாருக்கும் இனியவை செய்தல் மனிதப் பண்பு. ஆதலால் மதுரை மன்னருக்கு உதவலாம் என நினைக்கிறேன். எவ்வளவு வீரர்களைத் திரட்டலாம்" "கன்னடியர்கள் ஏற்கனவே இருமுறை மதுரை மீது படை யெடுத்து தோல்வி அடைந்தனர். இம்முறை கூடுதலான படையுடன்தான் வருவார்கள். அவர்களை எதிர்க்க மகாராஜா அவர்களையே மதுரை மன்னர் தலைமை தாங்கி போர் நடத்தும்படி கோரியிருப்பதால் நாம் இருபது ஆயிரம் மறவர்களுடனாவது செல்ல வேண்டும்." "சரி, நமது பாளையங்களுக்கு அவசரவோலை அனுப்புங்கள். திருப்பத்துார் சீமை, அஞ்சுகோட்டை சிமை, காளையார் கோயில் சிமை, நாலு கோட்டைச் சீமைப் பாளையக்காரர்கள், மறக்குடி மக்களைத் திரட்டி அடுத்த நான்கு நாட்களுக்குள் படைமாத்துாரில் நிலை கொள்ள வேண்டும். கமுதி, ஆப்பனுார், சாயல்குடி, பரமக்குடி, சீமைப் பாளையக் காரர்கள் தங்களது படைகளுடன் அடுத்த மூன்று நாட்களில் மானவீர மதுரைக் கோட்டைக்கு வந்து சேர வேண்டும். நாம் அங்கு சென்று தல்லாகுளம் மைதானத்திற்குப் போய்ச்சேரலாம்...... ஒரு வாரத்தில் படைகளுடன் மதுரையில் சந்திப்பதாக திருமலை மன்னருக்கு பதில் அனுப்பிவிடுங்கள்." | r II உத்திரவு "அந்தப் புலவரை அழைத்துவாருங்கள்" சற்று நேரத்தில் பிரதானியார் புலவருடன் மன்னரது அறைக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்து சேதுபதி மன்னர் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்து "வாருங்கள் புலவரே இப்படி அமருங்கள்" என்று இருக்கையை காண்பித்தார்.