பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 எஸ். எம். கமால் "இதையும் தங்களிடம் சேர்ப்பிக்க சமுகம் உத்தரவு" "சரி. = ." "உத்தரவு" என்று சொல்லியவாறு அஞ்சல் சேவகர்கள் விடைபெற்றுச் சென்றனர். மகாராணியும் கலாதேவியுமாக அந்தப்புள்ளி மான்குட்டிகளைப் பற்றி அனைத்துக் கொஞ்சியவாறு மகாராணியாரது அறைக்குச் சென்றனர். "மகாராணி இந்த இரு குட்டிகளும் மிகவும் அழகாக இருக்கின்றன அல்லவா?" "ஆமாம். இவைகளை மிகம்ை அக்கரையாக வளர்க்க வேண்டும். . . . இன்னொரு விஷயம். இவை இப்பொழுது மிக அழகாக இருக்கின்றன. வளர்ந்து பருவமடைந்த பிறகு, இவைகளின் இந்த நிர்மலமான மென்மையான கண்களில் விரகதாபம் நிறைந்து ஆக்ரோஷம் கொப்ப ளிக்கும். ஆதலால் பிஞ்சுப் பிராயத்தில் இருந்தே இவைகளிடம் நமது அன்பைச் சொரிந்து, அதில் என்றும் கட்டுப்பட்டு இருக்குமாறு அவைகளைப் பழக்க வேண்டும். ... என்ன புரிகிறதா?" சற்று மெளனத்துடன் கேட்டார் மகாராணியார். "ஆமாம் இவ்வளவு மோசமான விலங்கின் கண்களைக் கவிஞர்கள் பெண்களின் கண்களுக்கு உவமையாக எவ்விதம் தொடர்பு படுத்துகிறார்கள்?" "மாவடு போன்ற விரிந்த மென்மையான கண்கள் சாந்தம் சந்துஷ்டி, அறியாத் தன்மை ஆகிய பண்புகளுக்கு ஒப்பிட்டு புலவர்கள் மான்களின் கண்களை பெண்களது அழகிய கண்களுடன்