பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 219 உவமித்து மகிழ்வதுண்டு. இதில் தவறு ஒன்றுமில்லை. விரிந்த பெரிய இதழ்களுடன் புன்னகை பூக்கும் ரோஜா மலர்களைத்தான் யாரும் புகழ்வார்கள். அதன் அருகில் அமைந்து இருக்கும் முள்ளை யாரும் புகழ்வதில்லை. . . . மனித மனம் கூட நாளடைவில் மிகுந்த மாற்றத்தைப் பெறுகிறது. இது இயற்கைதானே?" மகாராணியின் இந்த சொற்கள் தம்மை நோக்கித் தொடுக்கப் பட்டவையாக இருக்குமோ என்று. அஞ்சிய கலாதேவி, மகாராணியார் விளக்கத்தின் பேரில் எவ்வித மறுமொழியும் சொல்லவில்லை. "என்ன கலாதேவி! நானன் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். மறுமொழி ஒன்றும் இல்லை. ... மகாராஜா உன்மீது எவ்வளவு கரிசனம் கொண்டுள்ளார் பார்த்தாயா தமது வருகையில் கணக்கம் ஏற்படுவதால் உனக்கு ஏமாற்றம் ஏற்படக்கூடாது என்பதற்காக மான் குட்டிகளை முன்னதாக அனுப்பி வைத்து இருக்கிறார்கள்." "ஆமாம். என் மீது மிகுந்த அன்புதான். ஆனால் அதைவிட மகாராணியாரது உத்தரவுக்கு இன்னும் மிகுந்த == o s | அன்புடன் பயமும் கூட! குத்தலாக கலாதேவி குறிப்பிட்டாள். "போடி உனக்கு எப்பொழுதும் கேலி மகாராஜா வந்தவுடன் . . . ." என்று சொல்லி ராணியார் சிரித்தார். கலாதேவியும் உடன் சிரித்தாள். மகாராணியார் பணியாளைக் கூப்பிட்டு இரண்டு மான் குட்டிகளையும் கொடுத்து, "இவைகளை மிகவும் அக்கரையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் புரிகிறதா?" என்று சொன்னார்.