பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 எஸ். எம். கமால் வர்களாக ஒருவர் முன் செல்ல அவர்களை அடுத்து தீவெட்டிச் சுளுந்துகளை துரக்கிச் செல்லும் திவெட்டிப் பணியாட்கள். அவர்களின் பின்னே போர் வீரர் குழு சென் {P35J. டம. டம. டம. - டம அந்தக்குழுவினர் செல்வதைக் குறிக்கும் குறியீட்டு இசை இராமநாதபுரம் கோட்டையில் உள்ளவர்கள் "பாரி" என்று அதனைச் சொல்வார்கள். அது அவர்களுக்குப் பழக்கமான இசைதான். ஆனால் அந்த இசையை நள்ளிரவில் கேட்பவர்களுக்கு சற்று பயங்கரத்தை ஏற்படுத்தி மனத்தில் பீதியை நிரப்பும். அந்தப்புரத்தின் பணியாளர் பகுதியில் சில ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் ராஜநர்த்தகிக்கும் இது பழக்கமான, பரிச்சையமான இசைக் கட்டுதான். ஆனால் அன்று மட்டும் அவள் என்ன காரணத்தாலோ பதறியவாறு உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்தாள். அறையின் நடுப்பகுதியில் தொங்கவிடப்பட்டிருந்த லஸ்தர் விளக்கின் மங்கிய ஒளியில் அவளது அழகிய முகம் அவள் அடைந்திருந்த பயத்தைப் பிரதிபலித்தது. தான் இருப்பது தனது அறைதானா என்ற சநதேகம், தூக்கக் கலக்கம் என்பதை உறுதிப்படுத்துவது போல கட்டிலில் இருந்து எழுந்து சென்று தெற்கே உள்ள சாளரத்தின் திரையை நீக்கி வெளியே ஒரு கனம் உற்று நோக்கினாள். வானமண்டலத்தில் சிதறிக் கிடந்த கண்ணாடி ஜிகினா துகள்கள் போன்ற நட்சத்திரங்களின் மிகவும் மங்கிய ஒளி, முறறத்தில் உள்ள துளசி மாடம். அதற்கு அப்பால் அரண்மனைத் தானியக் களஞ்சியக் கூரை, பொந்துகளில் அமர்ந்தவாறு அந்த இருள்