பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 223 நிறைந்த இரவின் அமைதியை அனுபவிக்கும் உற்சாகத்தில் விட்டு விட்டு கூவும் கோட்டான்கள். ஆனால், . . . சற்று முன்னர் கண்ட காட்சி .... மீண்டும் கட்டிலில் அமர்ந்து இரு கைகளினால் கண்களை சற்று மெதுவாக நெருடிவிட்டவாறு தனது நினைவைச் சோதித்துப் பார்த்தாள் கலாதேவி. அந்தப்புரத்தையடுத்த நந்தவனம். பெரும்பாலும் ஒய்வாகப் பொழுதினைக் கழிக்க மகாராணியார் சேது.கங்கை நாச்சியாரும், சில நேரங்களில் அபூர்வமாக சேதுபதி மன்னரும் அங்கு வந்து தங்கி இருப்பது வழக்கம் அன்று மகாராணியைக் கண்டு கொள்ள கலாதேவி அங்கு சென்றார். வழக்கமாக ராணியார் அமரும் வேம்பின் நிழலில் உள்ள அழகிய சிறுநாற்காலி காலியாக இருந்தது. "மகாராணி" "மகாராணி" குரல் கொடுத்தவாறு நந்தவனத்தின் வேறு பக்கத்திற்குச் சென்றாள். அங்கும் ராணியார் இருப்பதற்கான கழ்நிலை இல்லை. இன்னும் சற்று தொலைவில் உள்ள இளம் மாமரத்து நிழலில் சேதுபதி மன்னர் தனிமையில் அமர்ந்து இருப்பதை பார்த்து துணுக்குற்றாள்.