பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 எஸ். எம். கமால் ԼIյ IT է:Այ ԷԼյ இளந்தென்றல் அந்த மாமரத்து இளந்தளிர்களை அலைத்து கல கல வென்று சிறு இசையை அளித்துக்கொண்டிருந்தது. மன்னரது மனமும் அமைதியற்று அலைந்து கொண்டிருந்ததை அவரது முகம் பிரதி பலித்தது. சாந்தமும் மகிழ்ச்சியும் குழைந்து அன்பைச் சொரியும் அந்த கம்பீரம், கலைநிறைந்த முகம் எங்கே? கலாதேவியை அவர் கவனித்த பின்பும் வழக்கமாக அவரது வாயிலிருந்து வரும் குறும்பு பேச்சு இல்லை... எதுவும் இல்லை. எதிர்பாராத இந்த ஏமாற்றத்தினால் அவளும் என்ன செய்வது என்று புரியாது அப்படியே சில நிமிடங்கள் சிலை போல நின்றாள். யாரோ சிலர் மெதுவாக வரும் சலசலப்பு. பிரதானியார், அவரையடுத்து விலங்கு பூட் டப்பெற்று இரும்புச் சங்கிலியினால் பிணைக்கப்பட்ட இளந்துறவியை இழுத் து வரும் சில வீரர்கள். கலாதேவியின் கண்கள் கழன்றன. ஒருவகையாக தன்னைச் சமாளித்தவாறு ஒரு செடி மறைவில் நின்று அந்தக் காட்சியை ஊமையைப் போல விழித்துப் பார்த்தவாறு நின்றாள். "மகாராஜா உத்தரவு" பிரதானி சொன்னார். சங்கிலியால் பிணைக்கப்பட்ட அந்த இளைஞனை ஒருமுறை உற்று நோக்கிவிட்டு,