பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 225 "இவர்தான் நாம் தேடி வந்த கலகக் கும்பலின் தலைவரா?" "ஆம், மகாராஜா. சேதுபதி மன்னரது ஆட்சியை அகற்றிவிட்டு புதிய அரசு ஒன்றை அமைக்க கடந்த சில ஆண்டுகளாகத் திட்டமிட்ட செயல்பட்டு வந்ததை அவரே ஒப்புக் கொண்டு சத்தியப்பிரமான வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதோ அந்த வாக்கு மூலம் அவரே எழுதி கையெழுத்திட்டது." மன்னர் அந்த சிலையை வாங்கிப் படித்துப் பார்த்தார். அவரது கண்கள் இரையைத் தாக்க விழையும் புலியின் கண்களைப் போல சினத்தால் சிவந்து பிரகாசித்தன. "உம். சரி. ஐயா தலைவரே! எமது ஆட்சியில் உமக்கு ஏற்பட்டுள்ள பாதகம் என்ன சொல்வீரா?" "எனக்கு மட்டுமா? மகத்தான இந்த மறவர் சீமைக்கே தங்களது ஆட்சி மாபெரும் பாதகங்களைப் புரிந்து இருக்கிறது. சுயநலத்தின் வடிவம் தங்களது ஆட்சி என்று கருக்கமாக சொல்லிவிடலாம். காளையார் கோவிலில் தம்பித் தேவர் இறந்த பிறகு அந்த சிமைக்கு அவரது வாரிசுகளை இணைத்துக்கொண்டது. அதேபோல அஞ்சுகோட்டைச் சீமையில் தனுக்காத்த தேவர் வாரிசுகள் உரிமையைப் பறித்துவிட்டது. இவைகளைக் சிட ட மன்னித்துவிடலாம். ஆனால் மதுரைச் சீமையை ஆட்சி செய்யும் வடுக்கர்களுக்காக, அந்த அரசு நிலைபெறுவதற்காக அவரது ஜன்ம விரோதிகளான கம்பளத்தார்களையும், கன்னடியர்களையும் அடக்கி ஒடுக்க மறவர் சீமையின் ஆயிரக்கணக்கான தாய்மாரது தாலிகள் அல்லவா எட்டயபுரத்திலும் திண்டுக்கல்லிலும் பறிபோயின. இதைவிடக் கொடுமை, மாபாதகம் இந்த நாட்டு மறவர்களுக்கு என்ன இருக்கிறது? திருமலை நாயக்கர் தாலிக்கு வேலி என்று தங்களைப் புகழ்ந்து பாராட்டும் தங்களது ஆட்சி தொடர்ந்தால் இந்த சேது பூமியிலே மறவர் என்ற இனமேயில்லாமல் போய்விடும்." "மிகச்சிறப்பான கணிப்பு" ஏளனமாக சேதுபதி மன்னர் சொன்னார். "தாங்கள் திட்டமிட்ட சதியினால், எவ்வளவு மறவர்கள் மிஞ்சுவார்கள் எனக் கணக்குப் போட்டீர்களா?" "எல்லாவிதமான கணக்கையும் போட்டுத்தான் விடைகாணும் நாளை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறோம்."