பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 எஸ். எம். கமால் "அது தப்புக் கணக்கு என்று இப்பொழுது புரிந்து கொண்டீரா" மன்னரது கேள்வி "இல்லை. ஒரு தனிப்பட்டவனது அழிவினால் ஒரு இயக்கம் தோல்வியடையாது. ஒரு சிறு முடக்கம் வேண்டுமானால் அதுவும் சிலகாலம் ஏற்படலாம். ஆனால் இறுதிவெற்றி இந்த நாட்டு மறக்குடி மக்களுக்குத்தான்! ஏனெனில் இங்குள்ள மறவர்கள் சோழ சீமையில் இருந்து வந்தேறிய செம்பி நாட்டார் அல்ல. கல்தோன்றி மண் தோன்றாத காலம் முதல் இந்த மண்ணில் முளைத்த வளர்ந்த மூத்த குடியினர். இருமுறை இந்தப் புனித மண்ணில் பாண்டியமறவர் பேரரசுகளை உருவாக்க உதவிய உத்தமர்கள்." "சரி போதும் உங்கள் கருத்து என்ன?" பிரதானியைப் பார்த்து மன்னர் னிவினார். "இந்த இளைஞர் எதற்கும் பிடிகொடுக்காமல் பேசுகிறார். ஆனால் ராஜதுரோகக் குற்றத்தை ஒத்துக்கொள்கிறார். எனது முடிவை அவர் புரிந்துகொண்டு இருக்கிறார். சமுகம் முடிவு சொல்ல வேண்டியதுதான்." "இவர் திருந்துவதற்கு வழி இல்லை. இவருக்கு மரண தண்டனை வழங்குகிறேன்! இழுத்துச் செல்லுங்கள்." அதுவரை அந்தக் காட்சியைக் கண்டுவந்த கலாதேவி "மகாரா ജ്" என்று அலறியவாறு மூர்ச்சையடைந்தாள். அப்பொழுது அங்கு மகாராணியாருடன் வந்த பணிப் பெண்கள் அப்படியே கலாதேவி சாய்ந்துவிடாமல் தாங்கிப் பிடித்தனர். 載載 輯 轟 載 பின்னர் விழித்து எழுந்தபொழுது அவளது காதுகளில், "டம.டம.டம.டம." இசை ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த இரவு நேர அமைதியை குலைக்கும் அருவருப்பான முரட்டு இசை வழக்கமாக இராமநாதபுரம் அரண்மனைக் காவலர்கள் நாள் தோறும் நடுநிசியில் அரண்மனையைச் சுற்றிவரும் பாதுகாப்புப் பணியின் தொடர்ச்சி! என்பதை கலாதேவி உணர்ந்து இருப்பாள்.