பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V2 எஸ். எம். கமால் "மகிழ்ச்சி! எண்ணியதை எண்ணியவாறு முடித்துக்கொண்டு வாருங்கள். தமிழ்ப் புலமைக்கு சேது சமஸ்தானம் என்றும் தலை வணங்கும். இன்னும் மூன்று நாட்களில் மதுரை மன்னரது உதவியாக கன்னடியப் படைகளை பொருதுவதற்கு மதுரை செல்லுகிறோம். இரண்டு மாதம் கழித்து வந்தால் நாம் மீண்டும் சந்தித்து அளவளாவிக் கொள்வோம்" "மாற்றானை வீழ்த்தும் தமிழனது மறம் வாழ்க! மன்னரது வெற்றிக்கு மங்கல வாழ்த்துக்கள். இத்தகைய நெருக்கடி நிலையில் உள்ள தங்களது அரிய நேரத்தை வீணாக்காமல் விடை பெறுகிறேன்.' "வணக்கம்" மன்னர் வணங்கியவாறு எழுந்தார். அப்பொழுது அங்கு வந்த ராயசம் மன்னரை வணங்கி கும்பிட்டார். "ராயசம் புலவருக்கு விருந்து அளித்து அரண்மனை மரியாதையுடன் அனுப்பி வையுங்கள்" "சமூகம் உத்திரவு" "வருகிறேன் மன்னவ வணக்கம்" புலவர் விடைபெற்றுச் சென்றார். அப்பொழுது அந்த விசாலமான அறையில் அமர்ந்திருந்த சேதுபதி மன்னரது சிந்தனை அனைத்தும் மதுரைச் சீமை சென்று