பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 எஸ். எம். கமால் --- "சமுகம் உத்தரவு. திரு மெய்யம் கோட்டைத் தளபதி காத்து இருக்கிறார்" வீரர் ஒருவரது பணிவான அறிவிப்பு. "வரச் சொல்" "உத்தரவு" வீரன் அங்கிருந்து சென்றார். அவனையடுத்து நடுத்தர வயதுள்ள மனிதர், அங்கே வந்தார். நல்ல உடலமைப்பு. நடையிலே கம்பீரம். கண்களில் பெருமிதம் கூப்பிய கரங்களை உயர்த்தி மன்னரை கும்பிட்டவாறு மன்னர் முன் வந்து நின்றார். "மகாராஜா உத்தரவு" "என்ன பல்லவராயரே! நலந்தானா? உங்கள் பகுதி குடிமக்கள் பற்றி ஏதாவது செய்தி உண்டா? மதுரை நாயக்கரது ஒற்றர்கள் நடமாட்டம் அங்கு இருக்கிறதா? பத்து நாட்களுக்கு முன்னர் இங்கு நடந்தவைகளைக் கேள்விப் பட்டீர்கள் அல்லவா?" "ஆம். மகாராஜா சுவாமி தரிசனம் செய்ய வந்திருப்பதாக சொல்லிய மதுரை விடுகரது சிறு கூட்டம் இந்தக் கோட்டைப் போர் வீரர்களை திடீரென தாக்கி சிறிது நேரத்தில் கோட்டையை தங்களது பொறுப்பில் எடுத்துக்கொண்டார்களாம். ஆனால் மூன்று நாட்களில் பக்கத்தில் உள்ள பட்டமங்கலம், கண்டிராமாணிக்கம், கொங்கரத்தி, நடுவிக் கோட்டை நாட்டார்கள் திரண்டு வந்து மதுரை சொக்கநாத நாயக்கரது வீரர்களை திடீரென தாக்கி அவர்களை மதுரைக்கு ஒட்டம் பிடிக்கச் செய்தார்கள் எனக் கேள்வியுற்றேன். ஆனால் எங்களது திருமயம் கோட்டை நிலை வேறு. பெரும் படையுடன் திருச்சிராப்பள்ளி நாயக்கர் அங்கு வந்து முட்டினாலும் கூட ஒன்றும் நடக்காது. நமதுமக்களும் சரி, வீரர்களும் சரி, கூலிப் படைகள் அல்ல. நாட்டுணர்வும் ராஜவிசுவாசமும் மிக்கவர்கள் மகாராஜா" "மகிழ்ச்சி பல்லவராயரே! இந்த சேதுபதி சீமை தொடர்ந்து இதே கட்டுக் கோப்புடனும் வலிமையுடனும் திகழவேண்டும் என்பதுதான் நமது நோக்கம். சரி. இந்த ஆண்டு விவசாயம் எப்படி,கண்மாய்களில் தண்ணிர் இருக்கிறதா? குடிமக்கள் அமைதியாக இருக்கிறார்களா?" "மகாராஜா மக்களுக்கு குறை ஒன்றும் இல்லை. நல்ல மழை பெய்தது. ஆனால் வேளாண்மையில் பொலி இல்லை. இருந்தாலும் வழக்கம் போல சோழநாட்டில் இருந்துவரத்துவண்டிகள்