பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 229 ஏராளமாக வருகின்றன. ஆதலால் தான்ய தவசங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. தெற்குப் பகுதிகளில் ஆடு மாடுகள் கனை நோயினால் சிறிது சேதம். இதைத் தவிர சமுகத்திற்கு தெரிவிக்க வேண்டியது ஒன் றுமில்லை." "மகிழ்ச்சி! ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அறந்தாங்கி வழியாக விரைவாக ஒலையை இராமநாதபுரத்திற்கு அனுப்பி வையுங்கள். நீங்கள் சென்று வரலாம்." "உத்தரவு" திருமெய்யம் கோட்டை தளபதி பல்லவராயர் மன்னரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். மீண்டும் சேதுபதி மன்னர் தனிமையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்து இருந்தார். ஒரு வீரன் வந்து பணிந்து நின்று, "கவிராயர் வந்து இருக்கிறார்." 'உம். வரலாம்" மன்னரது மறுமொழி. மதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக்கவிராயர் வந்தார். "மகாராஜா வாழ்க!" "வாருங்கள். சென்ற ஆண்டு நவராத்திரி விழாவின் பொழுது சந்துத்தது அல்லவா?" "ஆமாம். மகாராஜா. நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? தாங்கள் இங்கு வந்திருப்பதாக அறிந்தேன். உடனே நேற்று புறப்பட்டேன். இப்பொழுதான் வந்து சேர முடிந்தது." "மகிழ்ச்சி. அண்மையில் இங்கு நடந்த மதுரைப் படைகளது ஆக்கிரமிப்புப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது தொடர்பாக திடீரென இங்கு வர வேண்டிய கட்டாயம்." "ஆமாம். கேள்விப்பட்டேன். மகாராஜா அவர்கள் மதுரை மண்ணிற்காகச் செய்துள்ள தியாகங்கள் மகத்தானது. மதுரை நாயக்க அரசு பரம்பரையினர் காலமெல்லாம் நினைவுகொள்ள வேண்டியது. ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் செய்த உதவியை மறந்தது மேற்கண்ட இந்தப் படையெடுப்பு நன்றி கொன்ற செயல்." திருக்கோயில் ஆலய மணியோசையினால் கவிராயரது பேச்சி தடைபட்டது.