பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 எஸ். எம். கமால் "சரி வாருங்கள் கோயிலுக்குச் சென்று பூசையில் கலந்துகொண்டு திரும்புவோம்." மன்னரைத் தொடர்ந்து கவிராயரும் சில வீரர்களும் சென்றனர். 事。事 寧 專 畢 காலை நேரம். அடுத்த நாள் சேதுபதி மன்னரும் அழகிய சிற்றம்பலக் கவிராயரும் உரையாடிக் கொண்டிருந்தனர். திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் போற்றிப் புகழ்ந்துள்ள திருப்பத்துார் தேவாரங்கள் பற்றிய சிறப்புக்களை கவிராயர் மன்னருக்கு விளக்கிக் கொண்டிருந்தார். பாண்டிய நாட்டு தேவாரப் பதிகளான பதினான்கு பதிகளில், ஐந்து சேதிபதி மன்னரது சீமையில் அமைந்து இருப்பது மிகவும் சிறப்பானது என்றும், அதில் "மாடமதில் சூழ் புத்துரரும்" ஒன்று எனக் குறிப்பிட்டார். "அதெல்லாம் சரி. இந்த கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள பெருமாள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" மன்னர் கவிராயரைக் கேட்டார். அதற்கு கவிராயர், "மகாராஜா அவர்கள் சொல்லுகிற சிற்பத்தைப் பார்த்தேன். அங்கு பூதேவியும் பெருமாளைப் பார்த்தவாறு அமர்ந்து இருக்கிறார். இதைத் தவிர அங்கு உள்ள கண்ணன் குழல் ஊதுவது, இரண்ய சம்ஹாரம் போன்ற சிற்பபங்களையும் நன்கு கவனித்தேன். திருப்பத்துரர் கோயிலில் உள்ள சிற்பங்களில் இவைதான் மிகவும் தொன்மையானவை என எனக்குப்படுகிறது. முற்காலத்தில் பெரும்பாலான ஆலயங்களில் சைவ வைணவ பேதங்கள் இல்லாத வகையில்தான் வழிபாடுகளும் விழாக்களும் நடந்துவந்து இருக்கின்றன. இன்று சைவர்களுக்கு மிகச்சிறந்த புனிதத்தலமான சிதம்பரத்திலேயே நடராஜர் சன்னதியை நோக்கி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியும் அமைந்து இருக்கிறதே! அரியும் சிவனும் ஒன்று என்ற பாமர மக்களின் நம்பிக்கையைத்தான் இது பிரதிபலிக்கிரது." "சரியாகச் சொன்னிர்கள் இயா இன்னும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அது தங்களுக்கு உடன்பாடா இல்லையா என்பது தெரியவில்லை." "67 m- a o п சாலலுங்கள மகராஜா