பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 231 "அதாவது இந்தக் கோயில் "சிதளி, சீதளியாண் | கோவில்" என்று வழங்கப்படுகின்றது அல்லவா? "சி" என்றாலே இலக்குமியைத்தானே குறிக்கும். திருமகனைக் கொண்ட பெருமாள் என்றுதானே கொள்ளலாம். மேலும் மயூரகிரி புராணத்தில் இலக்குமி கோயிலின் குளத்தில் நீராடி சிவபெருமாளை வழிபட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குளத்திற்கும் "சீதனிக்குளம்" என்ற வழக்கு உள்ளது. ஆதலால் இந்தக் கோயில் தேவார காலத்திற்கு முன்னரோ அல்லது அடுத்தோ மிகச்சிறந்த வைணவத் தலமாக இருந்து இருக்க வேண்டும் எனது கருத்து." "மகாராஜா அவர்களது கருத்தும் பொருத்தமானது. தான். மகாராஜா அவர்களது சீமை வைணவ சமயங்களின் சங்கம் ஸ்தலம்தான். இதோ பக்கத்தில் உள்ள கோட்டியூரில் மும்மூர்த்திகளும் ஒன்றுகடி உலக நன்மைப் பற்றி உரையாடித் தலமே சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறதே! வைணவ கடவுளான பெருமாள் ஈசுவரனை வழிபட்ட இடமல்லவா? நம்மிடையே பல சமயங்கள் இருந்தாலும் அவைகளின் சாரம் ஒன்றுதான்." கவிராயர் சொல்லிமுடித்தார். "இத்தகைய ஒன்றுபட்ட சமரச சமய உணர்வு தழைத்திட எமது முன்னோர்கள் பாடுபட்டார்கள். அந்த வழியில் நானும் சென்றுகொண்டிருக்கிறேன். வந்து சேருங்கள். = a அடடா, முற்பகல் பொழுது போனதே தெரியவில்லை. மன்னர் பணியாளை அழைத்தார். உணவு பரிமாற உத்திரவிட்டார். இருவரும் சமையல்கட்டுக்குச் சென்றனர். விருந்து முடிந்ததும் தாம்பூலத் தட்டு மன்னர் முன் கொண்டுவந்து வைக்கப்பட்டது. மன்னர் ஒரு பனமுடிப்பை அந்த தட்டில் வைத்து, புலவரிடம் நீட்டினார்.

  • "வழிச் செலவிற்கு வைத்துக்கொள்ளுங்கள்" புலவர் பணிந்து பெற்றுக்கொண்டார்.