பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 எஸ். எம். கமால் "சேதுபதிகளது கொற்றம் வாழ்க" மன்னர் கவிராயருக்கு விடை கொடுத்து அனுப்பினார். உவப்பத் தலைக.டி உள்ளம் பிரிதல் தானே அறிவாளிகளது செயல். அப்பொழுது அஞ்சல் சேவகர் ஒருவர் வந்து சேதுபதி மன்னரைப் பணிந்து நின்று திருமுகம் ஒன்றைக் கையளித்தார். அறந்தாங்கி கோட்டைச் சேர்வைக்காரர் அனுப்பினார் என்று சொல்லி. ஒலையைப் படித்து முடித்த மன்னர், "நாளைக் காலையில் இங்கிருந்து புறப்பட்டு அங்கு வருவதாகச் சேர்வைக்காரரிடம் சொல்." மன்னரது பதிலைக் கேட்ட அஞ்சல் சேவகர் மீண்டும் வணக்கம் சொல்லிவிட்டுச் சென்றார். அறந்தாங்கியில் என்ன நடக்கிறது? அறந்தாங்கியில் கோட்டைத் தளபதி அவசரமாக ஒலை அனுப்ப வேண்டியக் காரணம்? கடந்த மாதம் மதுரைச் சொக்கநாதரது படைகள் திடீரென மறவர் சீமைக்குள் புகுந்து மானாமதுரை, காலையார் கோவில், திருப்பத்துார் கோட்டைகளை அவர்களது வசப்படுத்திகொண்ட செய்தி மறவர் சீமையின் வடக்குப் பகுதியில் உள்ள குடிமக்களுக்கு அதிர்ச்சியை அளித்து இருக்க வேண்டும். இந்தக் கோட்டையில் இருந்து நாயககப் படைகள் மிகுந்த இழப்புகளுக்கிடையில் மதுரைக்கு ஒட்டம் பிடிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டனர். என்றாலும், மறவர் சீமையில் ஏற்பட்ட திடீர் நிகழ்வுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இராமநாதபுரம் மன்னரது ராஜவிசுவாசத்தை முறித்துக்கொண்டு, தன்னரக பெற முயன்றனர். முந்தைய அறந்தாங்கி தொண்டமான் வழிவந்த சேதுப் புரையர்கள், ஆயுதத்தைப் பயன்படுத்தி அடக்குவதற்கு அறந்தாங்கிக் கோட்டைச் சேர்வைக்காரர் அந்த இலையில் அனுமதி கோரிஇருந்தார். மறவர்களது குருதி வீணாக மண்ணில் சிந்தக் கூடாது என்பதற்காக சேதுபதி மன்னர் அறந்தாங்கிப் பயனத்தை மேற்கொள்ள முடிவி செய்தார். ஒரு சமரசமுயற்சியாக