பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 எஸ். எம். கமால் சிறிது நேரத்தில் சேதுபதி மன்னரது காவிக்த்ெ தூக்கிப் பிடித்த குதிரைவீரர் இருவரும் அடுத்து ஈட்டிகள் தாங்கிய போர்வீரர்கள் இருவரும் குதிரைகளில் அங்கு வந்து சேர்ந்தனர். சேதுபதி மன்னரும் அவரது பரிவாரங்களும் வந்துகொண்டிருப்பதை அறிந்த மக்கள் மகிழ்ச்சிகொண்டனர். அரை நாழிகை நேரத்தில் மன்னர் அங்கு வந்தபொழுது மக்கள் வாழ்த்து குரல் எழுப்பி மரியாதை தெரிவித்தனர். பின்னர் கோயில் குருக்களது பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்ட சேதுபதி மன்னர் கோயிலுக்குள் சென்று ஆராதனையில் கலந்துகொண்டு திரும்பினார். மீண்டும் கோயில் வாசலுக்கு வந்த மன்னரைக் கும்பிட்ட நாட்டுத் தலைவர் களும் அம்பலக்காரர்களும் மன்னரைப் பணிந்து அவரது திருப்பாதங்களில் மஞ்சல் துணியில் முடிந்த பணமுடிப்புக் காணிக்கைகளை வைத்து மரியாதை செலுத்தினர். அவர்களிடம் நாட்டு நடப்புக்களை அக்கரையுடன் கேட்டு அறிந்தபின்னர் கோயில் குருக்களிடம் கோயில் )ெ 1 அது நடைமுறைபற்றி விசாரித்தார். "தற்பொழுது மூன்று கால பூஜை மட்டும் நடத்தி வருகிேறாம் நூறாண்டு காலங்களுக்கு முன்னர் விஜயநகர மன்னர் சில அன்பளிப்புகளையும் அணிமணிகளையும் கவாமிகளுக்கு வழங்கினர். சேதுபதிகள் யாரும் இந்த சுவாமி மீது பற்றுக் கொள்ளவில்லை. சேதுபதிகள் சீமையில் மிகவும் சிறுபாண்மை சமணர்களாகிய நாங்கள் இங்கு இருபது குடிகள் மட்டுமே உள்ளோம். எங்களது மூதாதையரது முயற்சியினால் இந்த கோயிலில் ஏற்றி வைத்த தீபம் அணையாது தொடர்ந்து எரிந்துகொண்டிருக்க நாங்கள் அனைவரும் முயன்று வருகிறோம். சமய பேதம் இல்லாத மகாசமுகம் எங்களுக்கு ஏதும் ஒத்தாகை செய்தமால் பேருபகாரமாக இ i. கும்." குருக்களின் குரலில் தயக்கமும் தடுமாற்றமும் இருப்பதை மன்னர் உணர்ந்தார். மன்னர் சொன்னார்."இந்த புனித சேது நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை ஏற்றுள்ள எனக்கு சமயபேதம், சாதிப் பேதம் இல்லை. இருக்கவும் கூடாது. இருந்தால் அது எனது செங்கோலாக இருக்க முடியாது. இராம சேதுவும் இராமேசுவரம் திருக்கோயிலும் எனக்கு மிகவும் முக்கியமானதுதான்.