பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 எஸ். எம். கமால் பக்கீர் ஒருவர் சமாதியை நோக்கி கிழக்கே இருந்து திரளாக மக்கள் குதிரை வீரர்களுடன் வரும் சலசலப்பைக்கேட்டு எழுந்து அவர்களை நோக்கியவாறு எழுந்து நின்றார். அவர்கள் அருகில் வந்தவுடன் கோட்டைத் தளபதி, "கியா, இதோ சேதுபதி மகாராஜா அவர்கள் இந்த தர்காவில் அடக்கம் பெற்றுள்ள ஆத்ம ஞானியின் ஆசிர்வாதம் பெறுவதற்காக வந்துள்ளார்கள்" அந்த பக்கீரிடம் தெரிவித்தார். "மிகவும் மகிழ்ச்சி மகாராஜா அவர்களுக்கு இந்த குடிமகனின் சலாம்" என்று சொல்லியவாறு தனது இரு கரங்களையும் தமது நெற்றிவரை உயர்த்தி மரியாதை செய்தார். சமாதியை அடுத்து அறைக்குள் சென்று ஞானியின் சமாதிக்கு போர்த்தப்பட்டு இருந்த ஒரு பட்டுச்சால்வையைக் கொண்டுவந்து சேதுபதி மன்னருக்கு போர்த்தினார். "இறைவா! இங்கு அடக்கம் பெற்றுள்ள திரிகாலஞானி சையது முகம்மது புகாரி சாகிபின் துவாவைக் கொண்டு, இந்த மனனருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல உடல் நலத்தையும் மிகவும் மிகுதியான கீர்த்தியையும் புகழையும் அருள்புரிவாயாக" என வாழ்த்தினார். "பெரியவரே தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி. இங்கு அடக்கம் பெற்றுள்ள ஆத்ம ஞானி அவர்களது நினைவு நாளன்று நடைபெறும் கந்துரரி செலவிற்கு பயன்படுவதற்காக பக்கத்தில் உள்ள அழியாபதி கிராமத்தில் சில விளைநிலங்களை சர்வ மான்யமாக வழங்குகிறேன். இதே சேதுபூமியில் வாழ்கிறவர்கள், சைவராக, வைணவராக, பவுத்தராக, சமணராக, இசுலாமியராக இப்படி வேறுவேறு வழிபாட்டினராக இருந்தாலும், இந்த மண்ணில் பெருமைக்குரிய, ஒருதாய் மக்களாக ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதே சேது சமஸ்தானத்தின் நோக்கம். அதற்கான அனைத்து உதவி ஒத்தாசைகளையும் நாம் வழங்குவோம்" என்று மன்னர் சொல்லிவிட்டு அங்கு இருந்து தமது பரிவாரங்களுடன் புறப்பட்டார்கள். மன்னரும் பரிவாரங்களும் மதிய உணவிற்கு ஆறுமுகம் கோட்டைக்கு செல்லவேண்டும்.