பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 237 அவர்களின் மணிமுத்தாறு ஆற்றை கடந்து தெற்குக் கரைபோய்ச் சேர்வதை பார்த்துக்கொண்டிருந்த மக்கள், கலைந்து சென்றனர். 單 輩 輩 輩一輩 இராமநாதபுரம் இராஜசிங்க மங்கலம் வழியில் அமைந்துள்ள சிறுகோட்டை ஆறுமுகம்கோட்டை சுற்றிலும் பரந்த வெளியில் கோட்டக்கரை ஆற்றின் தென்கரையை இயற்கை அரணாகப் பெற்று இருந்தது. வடக்கே இருந்து இராமநாதபுரம் கோட்டைக்கு வரும் எதிரிகளைத் தடுக்கும் அரணாக அந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மன்னரும் பரிவாரங்களும் ஆறுமுகக்கோட்டையை அடைந்தபொழுது சூரியன் உச்சியில் இருந்து மேற்கில் சரிந்துகொண்டு இருந்தான். மன்னர் மதிய உணவை முடித்துவிட்டு கோட்டையின் கிழக்குச் சுவற்றையொட்டியிருந்த விசாலமான அறையில் ஒய்வாக அமர்ந்து இருந்தார். அப்பொழுது கோட்டைச் சேர்வைக்காரர். "மகாசமுத்திரத்திற்கு இராமநாதபுரத்தில் இருந்து திருமுகம் வந்து இருக்கிறது." என்று சொல்லியவாறு இராமநாதபுரம் மன்னர் முன் வந்து பணிந்து மரியாதை செய்தார். "பிரதானி அவர்கள் கொடுத்து அனுப்பினார்கள்" என்று சொல்லியவாறு ஒலைச்சுருள்களைக் கொடுத்தான். அதனை பெற்றுக்கொண்டு பிரித்துப் படிக்கத்துவங்கியதும், சேர்வைக் காரரும், சேவகரும் அறைக்கு வெளியே போய்விட்டனர். இராமநாதபுரம் சேவகரை அழைத்து, "இரவு இராமநாதபுரம் வருவதாக பிரதானியிடம் சொல்" என்று சொன்னதும் அதை சேவகர், மன்னருக்கு மரியாதை செலுத்தியவாறு பணிவாக அங்கிருந்து அகன்றார். அதே ஒலையில் ஏதோ முக்கியமான செய்தி இருந்திருக்க வேண்டும் என்பதை மன்னரது நடவடிக்கையில் இருந்து உணரமுடிந்தது. அவர் ஏதோ சிந்தையில் மூழ்கியவராக அதே அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவினார். கோட்டை சேர்வைக்காரனை அழைத்தார்.