பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 எஸ். எம். கமால் "அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள் அல்லவா?" கோட்டை சேர்வைக்காரனிடம் கேட்டார். "ஆமாம் பிரபு' கோட்டை சேர்வைக்காரன் பதில், "குதிரைகளுக்கும் கொள்ளு, தண்ணிர் கொடுத்து அந்தி நேரப் பயணம் புறப்படும்படி வீரர்களிடம் சொல்லவும்." "சமுகம் உத்தரவு" "வேறு செய்திகள் எதுவும் இருக்கிறதா?" "வடக்கு கோட்டைச்சுவர், சென்ற வருட மழையின் பொழுது சேதமடைந்து இருக்கிறது. சுமார் இருபது முழம் நீளத்திற்கு குன்னக்குடி வயிரவன் பட்டியில் இருந்து கல் அனுப்பும்படி உத்திரவானால் சீக்கிரமாக செம்மை செய்துவிடலாம்" "அப்பவும்..." மன்னர் தொடர்ந்து கேட்டார். "இங்கு என்னுடன் இருபது வீரர்கள் உள்ளனர். எங்கள் அனைவரது குடும்பங்களும் சாலை 5 ம் உள்ள குடியிருப்பில் இருக்கின்றோம். கோடை காலத்தில் குடிநீருக்கு ஆற்றிலல் ஊற்று தோண்டி தண்ணிர் எடுத்துக்கொள்கிறோம். மழைக் காலத்தில் ஆற்றில்வரும் வெள்ளம் கடலில் கலந்து இரண்டு மாதமாக கடல்நீர் ஆற்றில் நிலையாக தங்கிவிடுவதால் குடிதண்ணிருக்கு மிகவும் கஷ்டமாகிவிடுகிறது. இந்த கோட்டையில் அல்லது சாலை ஒரத்தில் ஒரு கேணி தோண்டினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்." it. = - - - * 1: சரி தக்க ஏற்பாடுகள் செய்யலாம். கோட்டைச் சேர்வைக்காரர், "சமுகம் உத்தரவு" என்று சொல்லிவிட்டு கோட்டை முகப்பிற்குச் சென்றுவிட்டார். மன்னர் மீண்டும் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். கட்டிலில் அவருக்கு இருப்புக்கொள்ளவில்லை. எழுந்து அறைக்குள் உலவிக்கொண்டே ஏதோ முக்கியமாக சிந்தித்துக் கொண்டிருந்தார். ఛీ ఛీ ఛీ