பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



240 எஸ். எம். கமால் "மகாராஜா பயணம் புறப்பட்டு போனவுடன் ராணியாருக்குத் திடீரென அசெளக்கியம் ஏற்பட்டுவிட்டது. காரணம் தெரியவில்லை. எப்பொழுதும் அவர்கள் அறியாத பயம் அவர்களது உள்ளத்தில் புகுந்து ஊசலாடிக் கொண்டு இருக்கிறது." கலாதேவி சுருக்கமாகச் சொன்னார். II * - „ II -- s i. * என்ன சேது சொல்" மன்னர் கேட்டார் "எனக்கு ஒன்றும் இல்லை மகாராஜா" ராணியாரது பதில் உறக்கத்தில் இருந்து எழுந்தவர் போல, II s s - - - ஒன்றுமில்லையா? அப்படியானால் எங்கே உனது கலகலப்பு குறுநகை மனத்திலே என்ன கவலை. என்னிடம் - - II சொல்லக்கூடாதா? "எனக்கு எந்த நோய் நொடியும் அல்ல மகாராஜா. ஆனால் எனது மனத்தை இனந்தெரியாத பயம் அழுத்துகிறது. அதனை எப்படி சொல்வது என்று புரியவில்லை. அவ்வளவுதான். வேறு ஒன்றும் இல்லை." மகாராணியார் மிகவும் சஞ்சலத்துடன் மெதுவாகச் சொன்னார். "எதற்கு பயம். இதோ நான் வந்துவிட்டேன். ஒன்றும் பயப்படத் தேவையில்லை. காலையில் வைத்தியரை வரச் சொல்லி அவரிடம் கேட்போம். இப்பொழுது அமைதியாக உறங்குங்கள்... அப்புறம் கலாதேவி மகாராணிக்கு ஒத்தாசையாக இரு" மன்னர் சொன்னார். "கடந்த பதினைந்து நாட்களாக இந்த அறையைவிட்டு என்னை வெளியே போக எங்கே மகாராணி அனுமதித்தார்கள். நான் இங்கேதான் இருக்கிறேன் மகாராஜா" கலாதேவி பதில், "சரி காலையில் வருகிறேன். நான் வரட்டுமா?" மன்னருக்கு மெதுவாக தலையசைத்து விடைகொடுத்தார் ராணியார்.