பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 241 முற்பகலில் நீராவி மாளிகையில் சேதுபதி பன்னர் மிகவும் சஞ்சலத்துடன் அமர்ந்து இருப்பதை அங்கு வந்த பிரதானியும் அரண்மனை வைத்தியரும் கவனித்துவிட்டனர். சில நொடிகள்மெளனமாக நின்றனர். பின்னர், "மகாராஜா கும்பிடுகிறேன்" பிரதானி வைத்தியர் ஆகியோரது குரல்கேட்டு மன்னர் சுயநினைவிற்கு வந்தார். மன்னர் கேட்தற்கு முன்னதாகவே வைத்தியர் முந்திக்கொண்டார். "மகாராஜா! நேற்று மாலையில்தான் அந்தப்புரத்திலிருந்து தகவல் வந்து ராணியைச் சந்தித்தேன். நாடிபார்த்தேன். நன்றாக இருக்கிறது. உடலில் எந்த கோளாறும் இல்லை. அவர்கள் எதையோ பார்த்து பீதியடைந்து இருக்கிறார்கள். நல்ல உணவும் அமைதியும்தான் தேவை. பயப்பட ஒன்றுமில்லை." "தாங்கள் சொல்வது சரிதான். ஆனால் ராணியின் உடல் இளைத்துவிட்டதே." "அவர்கள் உடல் தெம்பு ஏற்பட நல்ல லேகியம் கொடுத்து இருக்கிறேன். நாள்தோறும் சென்று கவனித்திக்கொள் கிறேன். இப்ெ பாழுதும் ராணியைப் பார்க்கத்தான் செல்கிறேன்." "நல்லது" மன்னரது பதிலை கேட்டதும் வைத்தியர் அந்தப்புரம் சென்றார். அப்பொழுது அங்கு இருந்த கார்வாரும் பிரதானியின் சைகை அறிந்து வெளியே சென்றார். தனித்து இருந்த மன்னர், "நேற்றைய ஒலையில் குறிப்பிட்டிருந்த உளவாளி விஷயம் என்ன?" மன்னர் கேட்டார். "இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தி நேரத்தில் நமது கோட்டை 5נעהם:5-ל"ח וה அடைக்கும்பொழுது நமது இறையாயிரம்கொண்டான் களஞ்சியத்திற்கு சில தவசவண்டிகள் வந்து இருப்பதாகத் தெரிந்து அவர்களை அனுமதிப்பதிப்பதற்காக காவலாலிகள் ஒரு கதவை திறந்துவிட்டிருக்கிநார்கள். ஒரு வண்டியில் மூட்டை அமர்ந்து இருந்த ஒருவரைபற்றி வண்டிக்காரர்களிடம் பணியாளர்கள் விசாரித்தபொழுது அதே நபர் அவர்களைச் சேர்ந்தவர் அல்லவென்றும், இராமநாதபுரத்திற்கு வந்த வழிப்