பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் ፖ43 It இராமேசுவரம் கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. மன்னரது உத்தரவின் பேரில் விழாவிற்கு шић гла мћ கால் நடவேண்டும். திருப்புல்லானிக் கோயில் வேலைகளும் வேகமாக நடைபெறுகின்றன." "மகிழ்ச்சி பஞ்சாங்க இயரை பார்த்து அடுத்த பத்து நாட்களில் ஒருநாளை நிர்ணயம் செய்எலது எல்லோருக்கும் தகவல் கொடுக்கலாம்." மன்னர் தெரிவித்தார். "சமுகம் உத்தரவு....மகாராஜாவிற்கு பயணக் களைப்பு இருக்கும். இன்று முழுவதும் ஒய்வாக இருக்கலாம். நாளைக் காலையில் சந்திக்கின்றேன்." பிரதானி மன்னரிடம் விடைபெற்றுச் சென்றார். 辜 事 驅 專,轟 சேதுபதி மன்னர் அந்தபுரம் சென்ற பொழுது அங்கே அரண்மனை வைத்தியர், ராணியார் குளிக்கும்பொழுது தலையில் தேய்த்துக் கொள்வதற்கான ஒரு தைலத்தைப் பற்றி கலாதேவியிடம் சொல்சிக்கொண்டிருந்தார். ராணியாரும் அவரது பேச்சை உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தார். "மகாராஜா வருகிறார்கள்" என்று மென்மையான குறலில் ஒருவர் மற்றொருவருக்கு சொல்லியவாறு தாதிப் பெண்கள் இடி மறைந்துவிட்டனர். தானாதிபதி மட்டும் குனிந்து மன்னருக்கு மரியாதை செலுத்தினார். தரையில் விரிப்பில் அமர்ந்து இருந்த கலாதேவி மரியாதையுடன் எழுந்தாள். வைத்தியர் அமர்ந்து இருந்த இருக்கைக்கு அருகில் இருந்த இருக்கையில் மன்னர் அமர்ந்தார். "மகாராஜா தங்கள் முகம் மிகவும் வாடி இருக்கிறதே. இரவி நன்றாக உறங்கவில்லையா?" என்று ஆதங்கத்துடன் வினவினார் மகாராணி. "உறக்கமா? உறக்கம் கலைந்து பல நாட்கள் ஆகி விட்டன. சேது நாட்டின் மணிமுடியைச் சுமந்து இருக்கும்வரை உறக்கமும் இல்லை. மனத்திற்கு நிம்மதியும் இருக்காது."