பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 எஸ். எம். கமால் மன்னரது விரக்தியான வார்த்தைகளைக் கேட்ட மகாராணியாரும் கலாதேவியும் வேதனைப்பட்டவர்களாக மெளனமாக இருந்தனர். இதயத்தில் சுமந்துள்ள பல சிரமங்களின் வெளிப்பாடாக அவசரப்பட்டு கடு சொற்களை உதிர்த்துவிட்டோமே என்று நினைத்த மன்னர், அந்த சோகமான தழ்நிலையை மாற்ற முயன்றார். "சேது ஒரு நல்ல செய்தி தெருயுமா? இந்த வருடம் மாசி சிவராத்திரி விழா, இராமேசுவரத்தில் நமது புதிய இரண்டாம் பிரகாரத்தில் நடக்கப் போகிறது. இடையில் இரண்டுவாரங்கள்தான் = II J, _GTTCTTCUT. "அப்படியா மிகுந்த சந்தோசம். நாம் முன்னதாகவே இராமேசுவரம் போய்விடலாம். என்ன கலாதேவி ஒன்றும் சொல்லாமல் இருக்கிறாய்?" மகாராணியார் கேட்டார். மறுமொழி சொல்லாது அமைதியாக இருந்த கலாதேவியை ஒரக்கண்ணால் நோக்கிய மன்னர், "சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள தனக்கு ஒன்றும் வாய்ப்புக் கொடுக்கவில்லை என்ற கோபம் போலும்." எனக் கிண்டலாகச் சொன்னார். "அப்படியொன்றும் இல்லை மகாராஜா எனது நடனத்தைவிட மகாராணியாரது உடல்நலம் பற்றிய சிந்தனையில்தான் இருந்துகொண்டிருக்கிறேன்." கலாதேவியின் மென்மையான பதில் இதுதான். "கலாதேவி நாட்டியம் இல்லாமல் நமது சமஸ்தானத்தில் எந்த நிகழ்ச்சியும் இருக்காது. இம்முறை இன்னொரு நாட்டிய கலைஞரும்பங்குகொள்ள இருக்கிறார்." என்று பேச்சை முடிக்காமல் சில நொடிகள் நிறுத்தியதும், மகாராணியும் கலாதேவியும் வியப்புடன் மன்னரை கூர்ந்து பார்த்தனர். "போட்டியாக யாரும் வரவில்லை. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் அல்லவா? தாடிக்கொம்பு கிராமத்தில் இருந்து கொண்டமநாயுடுவும் அவரது மகள் முத்தாம்பாளும் சேது நாட்டிற்கு