பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 எஸ். எம். கமால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இரண்டாம் பிரகாரத்தைக் கண்ணுற்றவராக பவனி வந்தனர். அர்களது பிரதட்சணம் முடிந்து சன்னதிக்கு நேரே வந்தபொழுது அங்கே அவர்களது முத்தப் பல்லக்கை இறக்கி வைத்தனர். அந்த இடத்துக்கு அன்மையில்தான் நாட்டிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே அந்த மேடைக்கு எதிர்ப்புறத்தில் இடப்பட்டிருந்த சில இடங்களில் மக்கள் மிகுதியாக கூடி இருந்தனர். சிறிது நேரத்தில் சேதுபது மன்னரும் அவரது பரிவாரத்தினரும் அங்கு வந்தனர். தேடகத்தில் இருந்த சிவாமியையும் அம்பாளையும் வணங்கிவிட்டு இருக்கையில் அமர்ந்தார் மன்னர். கொண்டமநாயுடு ம:னன்னர் முன் வந்து பணிந்து எதையோ சொன்னார். மன்னரும் தலை அசைத்தவுடன் அவரும் அவரது மகள் முத்தாலம்பாளும் அந்த மேடைக்குச் சென்றனர். மன்னரையும் மக்களையும் பார்த்து கைகுவித்து வணக்கம் தெரிவித்தனர். அப்பொழுது கூட்டத்தில் ஒரு பகுதியை விலக்கி கொண்டு வினை, மத்தளம், தம்புரா, ஆகியவைகளுடன் க்க வாத்தியக் கலைஞர்களும் மேடைக்கு வங்து அமர்ந்தனர். இசைக்கருவிகளில் சுருதி சேர்க்கப்பட்டது. சில நொடிகளில் கண்டமநாயுடு கைகளில் இருந்த சிங்கி கணிரென ஒத்திசைத்தவுடன் முக்தாலம்பாள் நாட்டியமாடத் தொடங்கனாள். அவளது கால்களில் னைத்து இருந்த சதங்கைகளின் இனிய இசையொலி ஜதீஸ்வரம் முடிந்தவுடன், கொண்டம நாயுடு பக்த இராபதாசரது தெலுங்கு கீர்த்தனையொன்றை பக்தி பரவசத்துடன் பாட அதற்கு முக்தாலம்மாள் அபிநயம் காட்ட மன்னரும் மக்களும் தங்களது பார்வையால் நடனமங்கையின் அழகையும், கால்கள், கைகள், கண்களது அபிநயத்தையும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். முக்தாலம்மாள் இவ்வளவு பெரிய கூட்டத்தினர் முன்பு நடன நிகழ்ச்சி நடத்தியது இதுதான் முதல்தடவை. ஆதலால் அவனது கண்களிலும் கால்களிலும் சற்று தயக்கமும் தளர்வும தொடக்கத்தில் இருந்தன. ஆனால் ஒரு சிறந்த நாட்டிய கலைஞர் என்ற முறையில் அவளது முழுமையான கவனமும் சிந்தனையும் சில நொடிகளில் நிகழ்ச்சியிலே முனைந்து நிகழ்ச்சியினை சாஸ்திர ரீதியாகவும் ஜன ரஞ்சகமாகவும் வழங்கினாள். மன்னர் மிகவும் மகிழ்ச்சியுற்றார். மக்களும் மகிழ்ந்துகொண்டு இருந்தனர்.