பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 251 இசைக்குழுவினர் மங்களம் பாடியதும் இவ்வளவு சீக்கிரமாக நாட்டியம் முடிந்துவிட்டதே என அங்கலாய்க்கனா. மேடையில் இருந்து கொண்டம நாயுடும் முக்தாலம்பாளும், இறங்கிவந்து மன்னர் முன் நமஸ்கரித்து நின்றனர். பொன்மணிச்சரம் ஒன்றை மன்னர் முக்தாலம்மாளுக்கு அன்பளிப்பாகவும் வழங்கினார். அதனை பெறுவதற்கு அவள் மன்னர் முன் வந்தபொழுது சிப்பணையும் அணிமணியும் மிகவும் குறைவாக இருந்தாலும் கூட பருவக்கோலம் பதிந்து நின்ற முக்தாலம்மாளின் வாளிப்பான உடலும் பருவ வனப்பும் காட்டில் விரிந்த நிலவாகிவிட்டதை ஒருகணம் நினைத்தார் மன்னர், அடுத்த நொடியில் "இந்தாருங்கள் கொண்டமநாயுடு" என அழைத்து ஒரு வெள்ளித்தட்டில் பட்டுவஸ்திரமும் தாம்பூலமும் சில பொற்காககளையும் வைத்து அவரிடம் நீட்டினர். அதனை பவ்யமாகப் பெற்றுக்கொண்டு. "மிகவும் தன்யனானேன் மகாப்பிரபு" என்று சொன்னார் நாயுடுகாரு. வாத்தியக் கலைஞர்களும் இதே மாதிரியான மரியாதைகளைப் பெற்றுச் சென்றனர். கோயில் நாயனக்குழுவின் தவில் முழங்கியது. சுவாமி, அம்மன் ஆகிாேரை மன்னரும் குழுவினரும் வணங்கியவுடன், பல்லக்கை துரக்கியவாறு போதிகள் சன்னதிக்குச் சென்றனர். மன்னரது இருக்கைக்குப் பின்னே இருந்து நிக ழ்ச்சியை கவனித்த மகாராணியாரும் கலாதேவியும் முக்தாலம்பாலின் கரங்களை அன்புடன் பற்றிக் கொண்டு, "மிகவும் நன்றாக ஆடினர்கள். மகிழ்ச்சி" என்றார் ராணி, "கலைத்துறையில் குடும்பப் பெண்ணும் ஈடுபடலாம் என்பதற்கு தங்களது அற்புத பயிற்சி சிறந்த எடுத்துக்காட்டாகும்." கலாதேவியின் பாராட்டுக்கள். இவ்விதம் அவர்கள் உரையாடிக்கொண்டே கோயிலின் கிழக்கிவாசலுக்கு வந்துவிட்டார்கள். அங்கே இரு பல்லக்குகள்