பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 எஸ். எம். கமால் தயாயராக இருந்தன. சேதுபதி மன்னர் ஒரு பல்லக்கிலும் மகாராணியும் கலாதேவியும் இன்னொரு பல்லக்கிலும் அமர்ந்தவுடன், "ஒலே லோ. . . . " என்ற வழக்கமான பல்லவியுடன் பல்லக்கு போகிகள் அரண்மனை நோக்கி நடைபோட்டனர். இராமேசுவரம் அரண்மனையில் இன்று இரவு மன்னருக்கு சிற்றுண்டிகள் பரிமாரிக்கொண்டிருக்கும்பொழுது முக்தாலம்பாளின் நாட்டியநிகழ்ச்சி பற்றிய பேச்சு தொடர்ந்தது. "கலாதேவி நாட்டியமாட மறுத்துவிட்ட ாலும், ஒருவகையாக நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டோம்." மன்னர் சொனனார். "சேது யாத்திரைக்கு வந்த முக்தாலம்காளை சதிர் ஆடவைத்துவிட்டீர்கள். முன்பயிற்சி இல்லாத போதிலும் அவளது முயற்சியும் நன்றாகத்தான் இருந்ததது." மகாராணி திருப்தியை தெருவித்தார். "வேறு என்ன செய்வது. கலாதேவி நமது கைகக்குள்தானே இருக்கிறாள். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்யலாம் என்று இருந்தேன். இப்படி நடந்துவிட்டதே என மனது சங்கடப்பட்டுவிட்டது. நல்ல வேளையாக முத்தாலம்மாள் நிறைவு செய்தாள்." "கலாதேவி வேண்டுமென்றே நிகழ்ச்சிக்கு மறுக்கவில்லை. எனது உடல் நலிவு அவளை மிகவும் பாதித்துவிட்டது. அவள் இப்பொழுது எல்லாம் கலகலப்பாக இருப்பது இல்லை." "நீங்கள் இருவரும் இரட்டையர்கள் ஆயிற்றே. ஒருவரது வருத்தம் மற்றொருவருக்கு பாதிக்குமல்லவா?" "உங்களுக்கு எப்பொழுதும் கிண்டல்தான்" II - - = *... st ஆமாம் எங்கே கலாதேவியைக் காணோம்? i