பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 253 IT இன் று வெள்ளிக்கி ழமையல்லவா? எனக்காக சுவாமியை வேண்டி உண்ணாவிரதம் இருக்கிறாள். கோயிலில் இருந்து வந்தவுடன் பாகவத பாராயணத்தில் உட்கார்ந்துவிட்டாள்." "அதுவா செய்தி. . . . உடன் பிறவாத சகோதரியின் இந்தப் பாசத்திற்கு உலகில் ஒப்புவமையே இருக்காது" மீண்டும் மன்னர் குறுநகையுடன் சொல்லிவிட்டு சாப்பாட்டு மனைப் பலகையில் இருந்து கை அலம்ப எழுந்தார். "அவள் உடன் பிறவாத சகோதரிதான். சொல்லப் போனல் அவள் எங்களது முத்துவயல் வீட்டில் பிறந்து இருக்க வேண்டும். தவறுதலாக எங்கோ பெதுகொண்டாவில் பிறந்துவிட்டாள். கணவன்தான் குடும்பப் பெண்ணுக்கு உயிர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எனது உயிர் நிலைத்துள்ள இந்த உடல் இயக்கமே கலாதேவியின் அன்பினால் என்றுதான் சொல்வேன்." "எவ்வளவு பெரிய சித்தாந்தம். எப்படியோ மகாராணியார் நோய் நீங்கி மகிழ்ச்சியுடன் இருந்தால் சரி" என்று சொல்லிவிட்டு மன்னர் தமது அறைக்குச் சென்றார். ஒருவிதமான ஆறுதலுடன் படுக்கைக்குச் சென்ற மன்னர், வழக்த்திற்கு முரனாக விரைவில் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டதில் ஆச்சரியமில்லை. 鬱鬱鬱