பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 255 நரிபோல முடங்கி கிடந்தவன் நேற்று இரவு ஜாமத்தில் இருந்து ஜக்கம்மா, ஜக்கம்மா என்று புலம்பிவந்தான். அழுகிறான், பாட்டுப்பாடுகிறான். என்னை விட்டுவிடுங்கள். ஜக்கம்மா உத்தரவு கொடுத்துவிட்டாள் என்று அலறுகிறான்." "அவனுக்கு எப்படியோ மனமாற்றம் ஏற்பட்டதுபோலத் தெரிகிறது. எதற்கும் அவனை விசாரிக்கலாம்" என்று பிரதானி சொல்லிவிட்டு எழுந்தவுடன், தளபதியும், சிறைக்காவலரும் அவருடன் சென்றனர். அங்கு அந்த கைதியைப் பார்த்து பிரதானி கேட்டார். "என்ன கோடங்கி நாயக்கரே செளக்கியம்தானா?" "ஆமாம் இயா, எல்லாம் ஜக்கம்மா கருணை" I - - - - - 'உங்கள் ஜக்கம்மாவிடம் கேட்டு உண்மையை சொல்லலாமா" "சொல்கிறேன் இயா" அவனது பேச்சு மிகவும் வித்தியாசமாக இருந்தது. உண்மையைச் சொல்லிவிடுவான் போல அவருக்குப் பட்டது. "தாயே! ஜக்கம்மா சொல்லட்டுமா தாயே!. சொல்லிவிடுகிறேன். . . சொல்லிவிடுகிறேன். . . . . " என்று சொன்னவன் உணர்ச்சிவசப்பட்டவனாக மூர்ச்சையுற்று தரையிலே சாய்ந்துவிட்டான். "இது என்ன புதிய தொல்லை" என்று ஏமாற்றத்துடன் சொல்லிய பிரதானி காவலாலிகளை அழைத்து அவனது முகத்தில் தண்ணிர் தெளிக்குமாறு செய்தார். மூர்ச்சை தெளிந்தவன் எழவில்லை. அப்படியே குறட்டைவிட்டு உறங்கினான். "எதற்கும் மீண்டும் முயற்சி செய்யலாம்." என்று சொல்லிய பிரதானி கோட்டை வாசலுக்கு அருகில் இருந்த அவரது அலுவலகத்திற்கு திரும்பிச் சென்றார். + + + + H+.