பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 எஸ். எம். கமால் பிரதானி அங்கே சென்றபொழுது அவசர ஒலை ஒன்றுடன் சேவகன் ஒருவன் காத்து இருந்தான். "ஐயா கும்பிடுகிறேன்" "எங்கிருந்து வருகிறீர்?" "தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி இந்த ஒலையை வேதாளை அம்பலக்காரர் கொடுத்து அனுப்பினார்." என்று சொல்லியவாறு ஒலையைப் பிரதானியிடம் அந்தச் சேவகர் கொடுத்தார். "மகாபதி ரீ இராமநாதபுரம் சமஸ்தானம் மேன்மைதங்கிய மகாராஜா அவர்கள் சமுகத்திற்கு வேதாளை அம்பலக்காரர் பணிந்து வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்வது. கடந்து ஒரு மாதமாக எங்களது ஊர் கடற்கரைப் பகுதியில் சில வெளியாட்கள் நடமாட்டம் - குறிப்பாக ஒரே குழுவைச் சேர்ந்த மூன்று பேர்கள் பின் இரவு நேரங்களில் வந்து போகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து தேடிப் பிடிப்பதற்குள் மறைந்துவிடுகின்றனர். ஆதலால் உளவுப்பிரிவு குதிரை வீரர்களை இந்த இடங்களில் சில நாட்களுக்கு ரோந்து வருமாறு செய்தல் பயனுள்ளதாக இருக்குமென்பதைப் பணிவுடன் தெருவித்துக்கொள்கிறேன்." முத்துக்கருப்பன் அம்பலம் "நல்லது. தக்க பதில் அனுப்பப்படும் என்பதை உங்களது அம்பல காரரிடம் சொல்." பிரதானின் பதிலைக் கேட்டு சேவகன் திரும்பிச் சென்றான். பிரதானிமட்டும் அங்கு அமர்ந்தவாறு சிந்தையில் மூழ்கி இருந்தார். 轟 車 ■ 輯 輕 சில மாதங்களுக்கு முன்னர் ஆற்றாங்கரைப் பகுதியில்தான் அன்னிய நடமாட்டம் பற்றிய தகவல்கள் வந்தன. இதற்கான பின்னணி எதுவாக இருக்கும் மன்னருக்கு எதிராக சதிகாரர்கள் இயங்கி வருகிறார்களா? இதில் ஈடுபட்டு இருப்பவர்கள் யார்? அவர்கள் சேதுபதி மன்னரது நெருங்கிய உறவினர்களா? அல்லது மதுரை, தஞ்சாவூர் மன்னர்களது கைக்கூலிகளா? அல்லது