பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 257 இலங்கை நாட்டு வணிகரா? அல்லது கள்ளச்சந்தை இந்தக் கடற்கரையில் நடைபெறுகிறதா? . . . . எத்தனையோ கேள்விகள். ஆனால் ஒரு விடைகட உதவுவதாக இல்லை. பிரதானி சோர்ந்து போய் அமர்ந்திருந்தார். அப்பொழுது சவுக்கையில் மன்னர் இருப்பதாகவும் பிரதானியை அழைத்துவருமாறு அழைத்ததாகவும் ஒரு சேவகர் செய்தி சொன்னார். பிரதானி தமது தலைப்பாகையை எடுத்து தலையில் அணிந்து சட்டைக்கு மேலாக சால்வையைப் போட்டுக்கொண்டு சவுக்கைக்குச் சென்றார். "சமுகத்திற்கு நமஸ்காரம்" என்று சொல்லிவிட்டு பிரதானி மன்னரைச் சந்தித்ததும் பணிவாக நின்றார். "பிரதானியாரே எட்டையாபுரம் உளவாளி பற்றிய விவரங்கள் ஏதும் கிடைத்ததா?" "இன்னும் அவன் பொருத்தமான தகவல்களை சொல்லவில்லை. இன்று காலையில்கட சிறைக்குச் சென்று அவனைச் சந்தித்தேன். ஏதோ ஆஞ்சனேய உச்சாடனம் செய்பவன் போல பேசுகிறானே தவிர உண்மையைச் சொல்லமறுக்கிறான். இன்றும் சில நாட்கள் பொறுத்துப்பார்க்கலாம் என்பது எனது கருத்து." "சரி கன்னிவாடிசின்னக்கத்ரி நாயக்கரிடமிருந்து ஒலை வந்துள்ளது. மதுரை சொக்கநாத நாயக்கரது சேது நாட்டு படையெடுப்புப் பற்றி வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார். நமது சீமைக் கோட்டைகளைத் தாக்கிய பிறகு மைதருடன் மோதியதில் பெருத்த நட்டமாம். கொங்கு நாட்டின் பெரும் பகுதியை மைசூர் மன்னர் தேவராஜர் கைப்பற்றிக்கொண்டாராம். கோயம்புத்துார், சேலம் பகுதிகள் மைசூர் சீமையாகிவிட்டனவாம். திருமலை நாயக்கர் இறந்து ஐந்து வருடங்களுக்குள் மதுரைச் சீமையின் பெருமை நிலைகுலைந்து இருப்பது வருத்தமாக இருக்கிறது." "உண்மைதான் மகாராஜா அடுத்து தஞ்சை மீது பெரும்படையெடுப்பிற்கு ஏற்பாடுகள் நடக்கிறதாம். தஞ்சை ரகுநாத நாயக்கர் சொக்கநாத நாயக்கருக்கு பெண் கொடுக்க மறுத்ததுடன் சொக்கநாத நாயக்கரை இழிவாகப் பேசிவிட்டாராம். நாயக்கருக்கு இன்னும் பைத்தியம் தெளியவில்லை. மீண்டும் நமது