பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 75 பிளிறி சேதுபதி மன்னருக்கு வரவேற்பு அளித்தன. அண்மையில் உள்ள நவபத்கானா மண்டபத்தில் இருந்து இசைக் கருவிகளின் இசை இனிமையாக ஒலித்தது. அடுத்து பெரிய ஓசைகளுடன் அதிர்வேட்டுகள் வெடித்தன. எல்லாம் சேதுபதி மன்னரது வருகைக்காக! முகப்பை தாண்டியதும் உயரமான துரண்களுக்கிடையில் அமைந்திருந்த பசும்புல் தரையைக் கடந்து சிறிய படிக்கட்டுகள் வழியாக தர்பார் மண்டபத்திற்குள் நுழைந்தார். வரிசையாக நின்றிருந்த வீரர்கள் மன்னரை வணங்கி மரியாதை செலுத்தினர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அதே மண்டபத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சேதுபதி மன்னரது நினைவுத்திரையில் நிழலிட்டன. அப்பொழுது கொலு வீற்றிருந்த திருமலை நாயக்கர் முன்னிலையில் கலகக்கார எட்டையபுரம் பாளையக்காரரை விலங்கிட்டு, அவர் கொண்டு வந்து நிறுத்தியதும், அந்த பாளையக்காரருக்கு மன்னிட் வழங்கிட மதுரை மன்னரிடம் அவர் வேண்டிக்கொண்டதும், தவறை உணர்ந்து எட்டையபுரம் பாளையக் காரரை திருமலை நாயக்கர் மன்னித்து அவரது பாளையத்தை அவருக்கு திருப்பி அளித்ததையும், தமக்கு ஏராளமான பரிசுகள் வழங்கி சிறப்புச் செய்ததையும் நொடிநேரம் நினைத்துப் பார்த்தார். இந்த இடைப்பட்ட மூன்று ஆண்டு இடைவெளியில் திருமலை மன்னரது கொலு மண்டபம் வெகுவாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பதையும் அப்பொழுது சேதுபதி மன்னர் கவனித்தார். "வலதுபுறம்." என்று மரியாதையுடன் சேதுபதி மன்னருக்கு வழியைக் காண்பித்தார் ராயசம். அங்கே திரும்பியதும் சொர்க்க விலாசம் அரண்மனைக்குள் நுழைந்தார். மேற்குப் பகுதியில் உள்ள மிகவும் விசாலமான அறை ஒன்றில் நான்கு யாழிகள் தாங்கிய பஞ்சசயன