பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 259 பிரதானி விடைபெற்றுச் சென்றார். கையில் இருந்த சுவடிகளில் தமது கவனத்தை செலுத்தி படிப்பதில் முனைந்தார் மன்னர். மன்னரது கவனத்தை அலைக்கழிக்கும் வண்ணம், அடுத்து அரண்மனைக் கார்வார் மன்னர் முன் வந்து வணங்கிவிட்டு, "மகாராஜாவிற்கு ராணியார் திருமுகம் அனுப்பி உள்ளார். இதோ" என்று சொல்லி ஒலைச் சுருள் ஒன்றை மன்னரிடம் கொடுத்தபடி நின்றார். அதனைப் பெற்றுக்கொண்ட மன்னர் ஆவலுடன் பிரித்துப் படித்தார். அவரது முகபாவத்தில் எவ்வித மாற்றமும் இல்லாததால் அதில் விசேடமான செய்தி எதுவும் இல்லை என்பதைக் கார்வார் ஊகித்து ஆறுதல் அடைந்தார். ஒலைச்சுருளை பக்கத்தில் இருந்த நாற்காலியில் வைத்து விட்டு, "நாளை காலை இராமேசுவரம் புறப்பட வேண்டும். வைத்தியரும் வரவேண்டும்." மன்னரை வணங்கிய கார்வார் அங்கிருந்து சென்றார். மீண்டும் மன்னர் தனிமையில் இருந்தார். இனிது இனிது ஏகாந்தம் இனிது. பிரதானி கோட்டைத் தளபதியுடன் அன்று காலையில் சிறைச்சாலைக்கு வந்த பொழுது, காவலர்கள் அவருக்கு மரியாதை செலுத்தியதுடன் கோடங்கி நாயக்கர் அடைபட்டிருந்த அறைக்கதவையும் திறந்துவட்டனர். பிரதானி கோடங்கி நாயக்கரைப் பார்த்து, "என்ன கோடங்கி நாயக்கரே சவுக்கியமாக இருக்கிறதா?" II o - - o - = | ஆமாம். எல்லாம் ஜக்கம்மா செயல் "அதுசரி... நீங்கள் யார்? என்ன காரியமாக இங்கே ஏன் வந்தீர்கள் அதைச் சொல்கிறீர்களா?"