பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 எஸ். எம். கமால் 'ஜக்கம்மா. சொல்லிவிடுகிறேன். முதலில் நாங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?.... ஜக்கம்மா சொல்லிவிடுகிறேன். நாங்கள் பரந்தாமன் கிருஷ்ணபரமாத்மாவின் வாரிசுகள், ஆந்திரா, ஒரியா நாட்டு எல்லையில் இருந்த எங்களை முஸ்லிம்களது படையெடுப்பில் எங்களது ஸ்திரீகளுக்குப் பங்கம் ஏற்படும் என நினைத்து விஜயநகருக்கு வந்தோம். இது ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாலே, அப்பொழுது எங்களது மந்தைக்கு பெரிய தனக்காரராக இருந்த நல்லமநாயக்கர், விஜயநகரத்தின் தெற்குவாசலைக் காவல்காத்து வந்த மிகப்பெரிய முரடனான சோமனைப் பொருதி வென்று வெட்டி வீழ்த்தியதுடன் அவனது தம்பி எட்டுப் பேரையும் உயிர்பிழைத்து ஒடுமாறு செய்தார். இந்த வீர சாகசத்தைக் கேள்வியுற்ற விஜயநகர சேனாதிபதி தம்பி மகாராஜா நல்லமனது வீரத்தை மெச்சி அவனுக்கு பல அணிமணிகளை அளித்தார். தம்பிகள் எட்டுப் பேர்களை உடையவன் என்ற பொருளில் எட்டப்பன் என்ற விருதையும் வழங்கினார். சந்திரகிரி என்ற பாளையம்பட்டின் அதிபராகவும் ஆக்கினார். அன்றிலிருந்து அவர் வழக்கமாக அணியம் வெள்ளிக் காப்புகளுடன் தங்கத்தினால் சோமனது தலை உருவம் பொறித்த பொற்காப்பு ஒன்றை அவரது இடது காலில் அணிந்து வந்தார். II "அந்தப் பழைய கதையெல்லாம் இன்னொரு நாளில் பேசிக்கொள்ளலாம். இப்பொழுது நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும்...."பிரதானியின் சொற்கள் பொறுமை இழந்து கடுமை தொனித்தது. "ஜக்கம்மா அது சொல்வதற்குத்தான் இதுவெல்லாம் சொல்ல வேண்டியதிருக்கு. . . நல்லமநாயக்க ர் நாற்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், அங்கு ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக அவர்களது மக்கள் தெற்கே குடிபுகுந்தனர். அவர்களில் மூத்தவரான குமாரமுத்து எட்டப்பன் காவிரியை கடந்து மதுரைக்கு வந்து அதிவீரராமபாண்டிய மன்னரது அரசியல் பணியில் சேர்ந்தார். இவருக்கு மதுரைக் கோட்டையின் மேலவாசல் காவல் பொறுப்பை அளித்து மேற்கு மலைத்தொடரில் உள்ள கரடிகோவில் வரையான காணியையும் வழங்கி இருந்தார். இவரது மகன் குமார எட்டப்பன், பாண்டியனை எதிர்த்த மூவரையனை வென்று பாண்டியமன்னரது பல பரிசகங்களைப் பெற்றார்.