பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும் 2Ꮾ1 "இவ்விதம் பல வீரசாகசங்கள் புரிந்தவர்கள் எட்டயபுரம் எட்டப்ப நாயக்கர்கள். இவர்களில் இருபத்தாறாவது பட்டத்திற்கு வந்த ஜகவீரராம கெச்சிலியப்ப எட்டப்ப நாயக்கன் இயனுக்கும் மதுரை கர்த்தாக்களுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தின் பொழுது தங்களது சேதுபது மன்னர், திருமலை நாயக்கரது வேண்டுகோளுக் -கிணங்கி எங்களது எட்டப்ப நாயக்கனை வென்று கைது செய்து திருமலை நாயக்கரிடம் ஒப்படைத்தார். ஒரு வீரன் மற்றொரு வீரனை வெல்வது போற்றத்தக்கதுதான். ஆனால் ஜக்கம்மா, எங்களது முன்னோர்களது வீரச்சின்னமாக, எட்டப்ப நாயகக்கர் அணிந்திருந்த சோமனது தலை உருவத்துடன் கூடிய பொன்னாலான வீர வெண்டையத்தை கைப்பற்றி அதில் சோமனது தலைக்குப்பதில் எங்களது எட்டப்ப இயனது தலை உருவத்தைப் பொறித்து அந்த வெண்டையத்தை தங்களது மன்னர் தமது இடதுகாலில் அணிந்து வருவது என்ன நியாயம் எட்டப்ப இயனது தலையுடன் கூடிய வெண்டயம் சேதுபதி மன்னரது இடம் பெற்று இருக்கும்வரை நாங்கள் எவ்விதம் ஜக்கம்மாவின் பக்தர்களக இருக்கமுடியும் இன்றைய ஒன்பது கம்பளத்தாருக்கும் மட்டும் மல்லாமல் ஆயிரம் ஆண்டுகளாக நாங்கள் எப்படி இருக்கமுடியும்? இந்த சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பழியை களைந்துமானத்துடன் வாழ ஜக்கம்மா எனக்கு அருள் புரிவதாக வாக்களித்தாள். "ஜக்கம்மாவின் அருளினால் என்க்குத் தெரிந்த மாந்திரீக சக்தி கொண்டும், பில்லி சூனியம் வைத்தும் குடும்பங்களில் துர்மரணித்த கன்னிப்பெண் தெய்வங்களை ஏவியும் எதிரியை அழிக்க முடியும். ஆனால் அது எங்களது வீரத்திற்கு பழியை ஏற்படுத்தக்கூடியது அதனால் நான் நேரில் வந்து இருக்கிறேன். எனக்கு ஜக்கம்மாள் துணையாக வந்து இருக்கிறாள். . . . வெற்றி! வெற்றி ஜக்கம்மா ஜக்கம்மா." சரநூல் ஜோதிடனைப் போல அதுவரை மளமளவெனன்று பேசிய அந்தக் கைதி மூர்ச்சையாகி விழுந்துவிட்டான். "ஏது. இவனோடு பொரிய தொல்லையாகப் போச்சு, பெருய மனநோயாளியாக இருப்பான் போலிருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டவுடன் மூர்ச்சையாகிவிடுகிறான்." பிரதானி சொன்னார்.