பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 எஸ். எம். கமால் ஆட்கள் மன்னரிடமிருந்து தலைப்பாகையையும் காஷ்மீர் சால்வையையும் பெற்று அவைகளை உரிய இடங்களில் வைத்தனர். மன்னர் இருக்கை ஒன்றில் ஆறுதலாக அமர்ந்தார். என்றாலும் சற்று முன்னர் திருக்கோயிலில் இரண்டாம் பிரகாரப் பணிகளை பார்வையிட்டு வந்ததால் அவைகளை நிறைவு செய்வதுபற்றிய அக்கரை அவரது மனத்தை உறுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆதலால் அந்தத் திருப்பணி பற்றி பிரதானியிடம் கேட்டார். "ஆமாம் இன்னும் எத்தனை நாட்களில் இந்த வேலைகள் முடிவு பெறும்" "சமுகம் நேரில் பார்த்தீர்கள் அல்லவா? பிரகார வேலைகளில் பிரதானமானவை முடிந்துவிட்டன. இனி தளத்தின் மட்டத்தை சரிசெய்வது, கல்தூண்களில் பாழி, பூதம், நானுதல் சரி பார்த்தல், கண்ணாம்பு தீர்வை, குழம்ாடுதல் ஆகிய சில்லரை வேலைகள்தான் பாக்கி அத்துடன் ச ருவறையைச் சுற்றி சில அலங்காரங்கள். இவை அனைத்தும் இன்னும் பத்து நாட்களில் முடிவடைந்துவிடும்" "மாசி சிவராத்திரிக்கு இன்னும் ஒருமாதம் உள்ளது. அந்த விழாவை இந்தப் புதிய பிரகாரத்தில் வைத்து நடத்திவிடலாமல்லவா?" "சமுகம் உத்தரவு" "இந்த முற்பகலில் ராணியார் தனுஸ்கோடி புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளைக் காலையில் ஆதி சேதுவில் நீராட எதற்கும் சேதுமாதவப் பெருமான் கோவில் பேஷ்காருக்கு இலையும் மற்றும் அங்கு தேவைப்படும் பொருட்களை தளபதியிடம் கேட்டு சேகரித்து இன்று மாலையிலேயே படகு மூலம் அங்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள். . . . அப்புறம். . . . அழகிய சிற்றம்பரக்கவிராயரது தளகிங்கமாலை ஏடுகளை வாங்கிச் சென்றீர்களே படித்து விட்டீர்களா?" - - "ஆமி மகாராஜா. கவிராயர் மகாராஜா அவர்களது