பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 எஸ். எம். கமால் "இப்பொழுது சிவராத்திரி முடிந்து பத்து நாட்கள் ஆகின்றன. சமுகம் அவர்களது உபசரிப்பும் விருந்தும் இதற்கெல்லாம் மேலாக இராமலிங்க தரிசனமும் எங்களுக்கு வாழ்க்கையிலே என்றும் கிட்டாத பாக்கியங்கள். எங்களுக்கு மிகுந்த திருப்தி. இதுவரை ஆந்திர நாட்டு சாம்ராஜ்ய விஜய நகர சக்கரவர்த்திக்கும் மகாமண்டலேசுவரர்களுக்கு மட்டும் எட்டுவதாக இருந்த இந்த ஆதி சேது யாத்திரையையும் இராமலிங்க தரிசனத்தையும் இந்த எளியவர்களுக்கும் எட்டும்படி செய்த மதா சமுகத்தை, நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். . . . மேலும் தாடிக்கொம்பு செளந்திரராஜப் பெருமானது பங்குனி உத்சவ ஏற்பாடுகளையும் கவனிக்க வேண்டும். ஆதலால் சமுகம் எங்களுக்கு . II உத்தரவு கொடுக்க வேண்டுமாறு விக்ஞாபித்துக் கொள்கிறோம். "செளந்திரராஜப் பெருமாளைத் தங்களது தரப்பிற்ஸ்கு கொண்டுவந்த பிறகு, உங்களைச் சுணக்கக் கூடாது. தங்களது விஜயமும் தங்கள் மகள் நடனம் நிகழ்ச்சியும் நீண்டகாலம் எங்களது மனத்தில் நிலைத்து நிற்கும்." என்று சொல்லிவிட்டு மன்னர் பிரதானியைப் பாாத்தார். அ ைரும் கார்வாரும் பக்கத்து அறைக்குச் சென்று இரண்டு ள் த் தட்டுகளில் வேட்டி, அங்கவஸ்திரம், பட்டுச்சேலை அலைகளின் மீது மஞ்சள் துணியில் பணமுடிப்பும், கோயில் பிரசாதமுமாக திரும்பி வந்தனர். "மகாசமுகத்திற்கு ஒரு விசயம். மகாராணியாரை நன்கு சோதித்து பார்த்துவிட்டேன். அவர்களுடைய உடலில் எந்த வியாதியும் இல்லை. ஏதோ சற்று மனத்திலே பீதி, அவ்வளவுதான். அவர்களுக்கு நல்ல தெம்பு ஏற்படவேண்டும். இரண்டு பட்சத்திற்கு நல்ல மாற்றம் இல்லை என்றால் எனக்குத் தகவல் கொ டுங்கள்." கொண்டமநாயுடு தெரிவித்தார் "நல்லது. இதோ எங்களது சமஸ்தான மரியாதையை பெற்றுக்கொள்ளுங்கள்." "மிகவும் தன்யனானேன்" என்று சொல்லியவாறு வேட்டி அங்கவஸ்திரம் உள்ள வெள்ளித்தட்டை மன்னரிடமிருந்து கொண்டமநாயுடு பெற்றுக்கொண்டார். அடுத்து அவரது மகள் முக்தாலம்பாள், மிகுந்த மகிழ்ச்சி