பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 267 -யுடனும், மரியாதையுடனும் மன்னர் அளித்த பட்டுச் சேலைகள் உள்ள தட்டினைப் பெற்றுக் கொண்டு முழந்தாளிட்டு நமஸ்காரம் செய்தார். "சென்று வாருங்கள் " என்று சொன்ன மன்னரது முகத்தில் சஞ்சலம் படிந்து இருப்பதைக் கண்ட அவர்கள் வருத்தத்துடன் விடைபெற்று சென்றனர். இவைகளைக் கவனித்த அழகிய சிற்றம்பலக் கவிராயர் "பிரிவு என்பது வா ழ்க்கையின் தவிர்க்க முடியாததொன்று, தலைவன் தலைவியைப் பிரிந்தாலும், பணியாள் மன்னரைப் பிரிந்தாலும், நண்பன் சினேகிதனைப் பிரிந்தாலும் பிரிவு அளிப்பது வருத்தமும் வேதனையும்தான். தம்மோடு காட்டிற்கு வரவேண்டாம் என்று சொன்ன இராமபுரானிடம் பிராட்டி சொன்னார். நின்பிரிவினும் கடுமோபெருங்காடு என்று" கவிராயரது கூற்று மன்னருக்கு ஒரளவு ஆறுதல் அளித்தது. "இவ்வளவு பெரிய பீடிகை எதற்கு என்று மகாராஜா அவர்கள் எண்ணலாம். நானும் தங்களிடமிருந்து பிரியாவிடை கோருவதாக இருக்கிறேன். நானும் வந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டன அல்லவா?" என்று தொடர்ந்து கவிராயர் சொல்லிமுடித்தார். "மன்னர் அதியமான் வேண்டுகோளை மீறிப் புறப்பட்ட ஒளவையாரது உடைமைகளைக் கவர்ந்து வருமாறு செய்து மீண்டும் ஒளவையார் அவரிடம் வருமாறு செய்ததுபோல, இனிமேல் நானும் அந்த வழியைத்தான் பின்பற்றவேண்டும்" என்று மன்னர் சிரித்துக்கொண்டே சொன்னார். கவிராயரும் பிரதானியும் மன்னரது சிரிப்பில் இணைந்து சிரித்தனர். "சரி அடுத்த நவராத்திரியின் பொழுது சந்தித்துக்கொள்ளலாம். பிரதானியாரே கவிராயருக்கு அரண்மனை மரியாதைகள் அளித்து அனுப்பிவையுங்கள்." "உத்தரவு மகாராஜா"