பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ტ எஸ். எம். கமால் கட்டிலில் திருமலை நாயக்கர் படுத்திருப்பதும் பக்கத்தில் பட்டத்தரசி அக்கம்மா மற்றும் பணியாளர்கள் மன்னரைச் தழ்ந்திருப்பதையும் கவனித்தார். "மகாரா ஜா! நமஸ்காரம்" பட்ட த்தரசியார் முதலில் சேதுபதி மன்னரைப் பார்த்து வணக்கம் சொன்னார். "நமஸ்காரம்" சேதுபதி மன்னர் அரசியாரையும் திருமலை நாயக்கரையும் இருகரம் கூப்பி மிகுந்த வாஞ்சையுடன் வணங்கினார். "வாருங்கள். வாருங்கள்" படுத்திருந்த நிலையில் திருமலை நாயக்கரது பலவீனமான குரல், கட்டிலின் அருகில் இடப்பெற்றிருந்த இருக்கையில் மன்னர் அமருமாறு திருமலை நாயக்கர் சைகை செய்தார். அதில் அமர்ந்த பொழுது, மதுரை மன்னரது உடல் நலிவு எந்த அளவிற்கு மோசமாக இருந்தது என்பதை சேதுபதி மன்னரால் புரிந்துகொள்ள முடிந்தது. "இப்பொழுது உடல் நலம் எப்படி இருக்கிறது" சே துபதி மன்னர் கேட்டார். "பரவாயில்லை. எல்லாம் மீனாட்சி தாயின் கிருபைதான்" திருமலை நாயக்கரது பலவீனமான குரலில் வந்த பதில், "மகாராஜா விருப்பப்படி எங்களது சீமை மறவர்களைத் திரட்டி வந்திருக்கிறேன். பதினைந்தாயிரம் பேர். தல்லாகுளம் மைதானத்தில் தண்டு இறக்கியுள்ளனர். அடுத்து மன்னர்தான் உத்தரவு இட வேண்டும்."