பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 269 II "ஒன்றுமில்லை.... "இது வழக்கமான பதில்தான்." "ஆமாம். பழக்கமான கேள்விக்கு வழக்கமான பதில்" என்று புன்சிரிப்புடன் கூறிய மகாராணியார் தங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. அதாவது எனது இதயத்திற்குள் மறைந்து இருப்பதாகத் தாங்கள் உணர்ந்தால் அதனை விரைவில் தங்களிடம் வெளிப்படுத்துவேன்....." என்று சொல்லிய ராணியார், "ஏன் தங்களது முகத்தில் இன்று மகிழ்ச்சி இல்லை" என்று பழைய வினாவிற்கு மீண்டும் விளக்கம் கோரினார். "திருவிழா முடிந்து இரண்டாம் பிரகாரத் திருப்பணியும் திருவருளாள் முற்றுப் பெற்றது. மகிழ்ச்சிப் பெருக்கால் திக்குமுக்காடினேன். இந்த விழாவினைக் கண்டுகளிக்க வந்தவர்கள் இப்பொழுது விடைபெற்று பிரிந்துசெல்லும் பொழுது வேதனையாக இருக்கிறது. சற்று முன்னர்தான் நமது விருந்தாளிகளான அழகிய சிற்றம்பழக் கவிராயரும், கொண்டம நாயுடுவும் முக்தாலம்மாளும் விடைபெற்றுச் ெ சன்றனர்." 'நண்பர்கள், மி_வும் பழகியவர்களைக்கூட பிரிந்து செல்ல தங்களது மனம் இடங்கொடுக்கவில்லை.... "ராணி பேச்சை நிறுத்தினார் பெருமூச்சுடன். "ராணி ஏன் நிறுத்திவிட்டீர்கள்? சொல்லி முடிக்கலாமே?" மன்னர் கேட்டார். "வேண்டாம். ஏற்கனவே மன நிம்மதியற்று இருக்கிறீர்கள். நொந்த புண்ணை முள் கொண்டு நோகச் செய்வது கூடாது..." சரி இப்பொழுது சாப்பிடச் செல்லலாமா?" இல்லை. இப்பொழுது மனது ஆறுதலாக இல்லை. எனது அறைக்குச் செல்கிறேன். . . . கலாதேவி உனக்குத்தான் தெரியுமே ராணியாருக்கு திருவாசகத்தில் மிகுந்த ஈடுபாடுகள் என்று. திருவாசகப் பாடல்களை பாடி அபிநயத்துடன் ஆடினால் அவருக்கு மனத்தெளிவும் தெம்பும் ஏற்படுமல்லவா?"